வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த 'சீயான்' விக்ரம்

சீயான் விக்ரம் நடிப்பில்,  'வீர தீர சூரன் பார்ட் 2 '  படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 4, 2025, 04:05 PM IST
  • படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது.
  • ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த 'சீயான்' விக்ரம்

சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Add Zee News as a Preferred Source

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' (veera dheera sooran Part 2) திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது இப்படம். 

ரிலீஸ் நாளில் பல தடைகள் ஏற்பட்ட நிலையில், அனைத்தையும் கடந்து, ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதால், படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது. 

இது குறித்து நடிகர் சீயான் விக்ரம் தெரிவித்தாவது…. எனது ரசிகர்களுக்கு ஒரு மாஸானா, கிளாஸான, உண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்டநாட்களாக ஆசைப்பட்டேன். இயக்குநர் அருண்குமார் மூலம் அது நடந்தது. படம் ரிலீஸுக்கு முன்னால் பார்த்த நண்பர்கள் இது இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக இருக்குமென பாரட்டினார்கள். ஆனால் ரிலீஸ் நாளான்று எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்களால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அந்தப்படம் ஓடாது என்பார்கள். எங்கள் படம் மாலைக்காட்சி தான் வந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் தந்த வரவேற்பு மறக்கமுடியாதது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ஒவ்வொரு விசயத்தையும், குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டாடினார்கள். படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளார்கள். என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன். அனைவருக்கும் நன்றி. 

மக்களின் பெரும் வரவேற்பில், உலகமெங்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வீர தீர சூரன் பாகம் 2 கதை:

மதுரை ஊர்த்திருவிழாவில் இரு பெருந்தலைகளுக்குள் சண்டை மாள்கிறாது. இதனை காரணமாக வைத்து, இவரை போட்டுத்தள்ள நினைக்கிறார் அந்த உரின் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யா. சண்டையிட்ட பெருந்தலைகளுள் ஒருவர், தன்னை காப்பாற்றுமாறு மளிகை கடை வைத்திருக்கும் விக்ரமின் உதவியை நாடுகிறார். பெரிய தலைவராக இருக்கும் ஒருவர், சாதாரண மளிகை கடை வியாபாரியான விக்ரமின் உதவியை நாடுவது ஏன்? அவருக்கு பின்னால் இருக்கும் ஃப்ளேஷ்பேக் என்ன என்பதை வைத்து படம் நகர்கிறது.

மேலும் படிக்க | அஜித்துடன் மோதும் ரஜினி! கூலி படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?

மேலும் படிக்க | விடாமுயற்சி-குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படம் எது? இயக்குநர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News