விக்ரமுக்கு கம்-பேக் படமாக அமைந்ததா வீர தீர சூரன்? திரை விமர்சனம்!

Veera Dheera Sooran Part 2 Review Tamil : விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம், வீர தீர சூரன் பாகம் 2. பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 28, 2025, 10:57 AM IST
  • வீர தீர சூரன் பாகம் 2-திரை விமர்சனம்
  • விக்ரம் ஹீரோவாக நடித்தது..
  • படம் எப்படி?
விக்ரமுக்கு கம்-பேக் படமாக அமைந்ததா வீர தீர சூரன்? திரை விமர்சனம்!

Veera Dheera Sooran Part 2 Review Tamil : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கும் சியான் விக்ரம், நடித்துள்ள ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படம், வீர தீர சூரன் பாகம் 2. அருண்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம், பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் கதை என்ன என்பதையும், இதன் விமர்சனத்தையும் இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

வீர தீர சூரன் பாகம் 2 கதை:

மதுரை ஊர்த்திருவிழாவில் இரு பெருந்தலைகளுக்குள் சண்டை மாள்கிறாது. இதனை காரணமாக வைத்து, இவரை போட்டுத்தள்ள நினைக்கிறார் அந்த உரின் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யா. சண்டையிட்ட பெருந்தலைகளுள் ஒருவர், தன்னை காப்பாற்றுமாறு மளிகை கடை வைத்திருக்கும் விக்ரமின் உதவியை நாடுகிறார். பெரிய தலைவராக இருக்கும் ஒருவர், சாதாரண மளிகை கடை வியாபாரியான விக்ரமின் உதவியை நாடுவது ஏன்? அவருக்கு பின்னால் இருக்கும் ஃப்ளேஷ்பேக் என்ன என்பதை வைத்து படம் நகர்கிறது.

விக்ரமின் அபரிபிதமான நடிப்பு:

விக்ரம், தான் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும், அதற்கு தனது 100 சதவீத உழைப்பை கொடுப்பார் என தெரியும். அந்த வகையில் இந்த படத்திலும் தனது முழு உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரு குடும்பஸ்தனாக, மனைவியை காதலிக்கும் இடத்தில், தனது குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு மனநிலை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். இது, நிச்சயமாக அவருக்கு கம்-பேக் படமாக இருப்பதாக ஆடியன்ஸ் கருத்து தெரிவிக்கின்றனர்.

விக்ரமின் காதல் மனைவியாக துஷாரா விஜய்யன் அப்ளாச் அள்ளும் நடிப்பு காட்டுகிறார். தன் கனவனுகும், வில்லன்களுக்கும் இடையே என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழிக்கும் இடத்திலும், ரசிகர்களின் மனங்களை கலங்க வைக்கிறார்.எஸ்.பி-யாக எஸ்.ஜே.சூர்யா சூழ்ச்சி, வன்மம், கோபம் என அனைத்து வித உணர்ச்சிகளையும் நமக்குள்ளும் கடத்தி திரையிலும் காண்பிக்கிறார். 

சூரஜ்:

மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடுவிற்கு வீர தீர சூரன் முதல் படமாகும். இவரை பல நேர்காணல்களில் பார்த்தவர்கள், இவருக்கு படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் இருக்கும் என எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, படத்தில் அவருக்கு நல்ல கதாப்பத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரமாக வந்தாலும், உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார்.

மிரட்டலான பின்னணி இசை!

படத்தில் பல காட்சிகளில், பின்னணி இசையே பேசுகிறது. ஜி.வி.பிரகாஷின் இசையே காட்சிகளை வேகமாக நகர்த்துகிறது. பாடல்கள் கொஞ்சம் வேகத்தடையாக இருக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் மனதில் நிற்கிறது. முதல் பாதியில் திரைக்கதையில் இருக்கும் வேகம், இரண்டாம் பாதியில் பெரிதாக தெரியவில்லை. ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் எடிட்டிங் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.  துப்பாக்கி சூடு காட்சி, கார் வெடித்து சிதறும் காட்சி ஆகியவற்றிற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

மொத்தத்தில்..

நல்ல கதையுடன் கூடிய ஆக்ஷன் த்ரில்லர் படத்தை, கொஞ்சம் பொறுமையுடன் பார்க்க நினைத்தால், கண்டிப்பாக வீர தீர சூரன் பாகம் 2 படத்தை தியேட்டரில் சென்று பார்க்கலாம்.

மேலும் படிக்க | "என்னை மன்னிச்சுடுங்க" வீர தீர சூரன் இயக்குனர் வீடியோ!

மேலும் படிக்க | வீர தீர சூரன் X விமர்சனம்: விக்ரமிற்கு பிளாக்பஸ்டர் வெற்றியா? மீண்டும் சொதப்பலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News