வீர தீர சூரன் vs எம்புரான்: எது நல்லா இருக்கு? எதை முதலில் பார்க்கலாம்?

Veera Dheera Sooran Vs L2 Empuraan : மார்ச் 28ஆம் தேதியான நேற்று ஒரே நாளில் வீர தீர சூரன் மற்றும் எம்புரான் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸாகின. இந்த 2 படங்களில் எது நல்லாயிருக்கு? ரசிகர்களின் கருத்து இதுதான்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 28, 2025, 01:51 PM IST
  • வீர தீர சூரன் 2 vs எம்புரான்!
  • இரண்டு படத்தில் எது ஓகே?
  • இந்த இரண்டில் எதை முதலில் பார்க்கலாம்?
வீர தீர சூரன் vs எம்புரான்: எது நல்லா இருக்கு? எதை முதலில் பார்க்கலாம்?

Veera Dheera Sooran Vs L2 Empuraan : இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படங்களுள் ஒன்று, வீர தீர சூரன் பாகம் 2. இதில் விக்ரம் நடித்திருக்கிறார். இதைப்போலவே, தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று எம்புரான். இந்த படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த இரு படங்களில் எது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது தெரியுமா?

Add Zee News as a Preferred Source

வீர தீர சூரன் பாகம் 2:

கடந்த சில ஆண்டுகளாகவே பெரிதாக ஹிட் கொடுக்காத நடிகராக இருக்கிறார், சியான் விக்ரம். இவரை வைத்து, அருண்குமார் இயக்கியிருக்கும் படம், வீர தீர சூரன் பாகம் 2. இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகிவிட்டு அதன் பிறகு, முன்கதையாக அடுத்த பாகம் வெளியாக இருக்கிறது. இதில், விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், சித்திக் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நெகடிவ் ரோலில் நடித்துள்ளனர்.

இந்த படம், மார்ச் 28ஆம் தேதி வெளியாகுமா என்பதே பெரிய கேள்விக்குறியாகி போய்விட்டது. காரணம், ஓடிடி உரிமை வழங்கப்படாமல், இப்படம் ரிலீஸாக இருப்பதாக தயாரிப்பாளர்களுள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் இந்த படத்தை 4 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது என்று கூறி இடைக்காலத்தடை விதித்தது. இதையடுத்து, பணம் சரியாக டெப்பாசிட் செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று மாலை காட்சியாக படம் வெளியானது.

படம் எப்படி?

வீர தீர சூரன் பாகம் இரண்டு திரைப்படத்தில் விக்ரம் வழக்கம் போல தனது 100% உழைப்பை போட்டு, நடித்திருக்கிறார். படத்தின் முதல் பாதி மிக வேகமாகவும், இரண்டாம் பாதியில் ஃப்ளேஷ்பேக் கொஞ்சம் தொய்வுடன் இருப்பதாகவும் படம் பார்ப்பவர்கள் கூறியிருக்கின்றனர். ஆக்ஷன் படத்தை விரும்பி பார்ப்பவராக இருந்தால், கண்டிப்பாக இதனை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம். 

எம்புரான்:

எல்2:எம்புரான் திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் வெளியானது. மலையாள திரையுலகில் அதிக பட்ஜெட்டில் படங்கள் வெளியாவதே மிக மிக அரிது. அப்படி அரிதான திரைப்படங்களுள் ஒன்றாக இந்த படமும் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் கதையை முரளி கோபி எழுதியிருக்கிறார். 

பெரும்பாலான மலையாள திரைப்படங்கள், வாழ்வியலை பேசும் திரைப்படங்களாக இருக்கும். எப்போதாவது அரிதாகத்தான் ஆக்ஷன் த்ரில்லர் அல்லது பக்கா மசாலா படங்கள் வெளியாகும். அந்த வகையில், எல்:2 எம்புரான் திரைப்படமும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர்-கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது.

இந்த படம் எப்படி?

இந்த படம், நல்ல அரசியல் டிராமாவாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த படத்தில் சரியான கதை இல்லை என்றும், ஆனால் துப்பாக்கி, ஹலிகாப்டர், மாஸான காட்சிகள் என பல விஷயங்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இரண்டில் எது ஓகே?

தமிழக மக்களை பொறுத்தவரை, வீர தீர சூரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எம்புரான் திரைப்படத்தில் இருக்கும் கதை கொஞ்சம் ஆழமானதாகவும், சிலரது கருத்துகளுக்கு ஒத்துவராததாக இருப்பதாலும் ஒரு சிலர், இதில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. எனவே, தமிழ் நாட்டை பொறுத்தவரை வீர தீர சூரன் படம்தான் நல்ல வரவேற்பு பெற்றதாக இருக்கிறது.

மேலும் படிக்க | விக்ரமுக்கு கம்-பேக் படமாக அமைந்ததா வீர தீர சூரன்? திரை விமர்சனம்!

மேலும் படிக்க | வீர தீர சூரன் X விமர்சனம்: விக்ரமிற்கு பிளாக்பஸ்டர் வெற்றியா? மீண்டும் சொதப்பலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News