வீர தீர சூரன் படம் எப்படி உள்ளது? வெளியானது முதல் விமர்சனம்!

Veera Dheera Sooran Review: எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வீர தீர சூரன் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Mar 25, 2025, 08:25 AM IST
  • 27ம் தேதி வெளியாகும் வீர தீர சூரன்.
  • விக்ரம், துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
  • அருண்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
வீர தீர சூரன் படம் எப்படி உள்ளது? வெளியானது முதல் விமர்சனம்!

Veera Dheera Sooran Review: ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சித்தா படத்தில் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து எஸ் . யூ.  அருண்குமார் இயக்கியிருக்கும் படம் தான் வீர தீர சூரன் பார்ட் 2. இந்த படத்தில் சியான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேனி ஈஸ்வரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.

மேலும் படிங்க: பொங்கலுக்கு ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்த விஜய்யின் படங்கள்! ஜன நாயகன் கன்ஃபார்ம் ப்ளாக் பஸ்டர்தான்..

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில் பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால் விடாமுயற்சி படம் வெளியானதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. பின்பு குடியரசு தினத்திற்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மார்ச் 27ஆம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வீர தீர சூரன் படம் வெளியாக உள்ளது.

படத்தின் முதல் விமர்சனம்!

படத்தின் டிரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மாவீரன் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா அவரது எக்ஸ் தள பக்கத்தில் வீர தீரன் படத்தின் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். "Remember the name S U Arunkumar! *Not a promotional tweet*" என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த படம் நிச்சயம் ஹீட் அடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான எந்த ஒரு படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெறாததால் தற்போது இந்த விமர்சனம் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

மேலும் படிங்க: கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News