வீர தீர சூரன்? திரை 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Veera Dheera Sooran 2 OTT : விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம், வீர தீர சூரன் பாகம் 2. தற்போது இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 18, 2025, 05:55 PM IST
  • வீர தீர சூரன் பாகம் 2 ஓடிடி ரிலீஸ் தேதி
  • எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்.
வீர தீர சூரன்? திரை 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Veera Dheera Sooran 2 OTT Release Date Announced: தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கும் சியான் விக்ரம், நடித்துள்ள ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படம், வீர தீர சூரன் பாகம் 2. அருண்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம், பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த மார்ச் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

Add Zee News as a Preferred Source

வீர தீர சூரன் பாகம் 2:
மதுரை ஊர்த்திருவிழாவில் இரு பெருந்தலைகளுக்குள் சண்டை மாள்கிறாது. இதனை காரணமாக வைத்து, இவரை போட்டுத்தள்ள நினைக்கிறார் அந்த உரின் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யா. சண்டையிட்ட பெருந்தலைகளுள் ஒருவர், தன்னை காப்பாற்றுமாறு மளிகை கடை வைத்திருக்கும் விக்ரமின் உதவியை நாடுகிறார். பெரிய தலைவராக இருக்கும் ஒருவர், சாதாரண மளிகை கடை வியாபாரியான விக்ரமின் உதவியை நாடுவது ஏன்? அவருக்கு பின்னால் இருக்கும் ஃப்ளேஷ்பேக் என்ன என்பதை வைத்து படம் நகர்கிறது.

விக்ரமின் அபரிபிதமான நடிப்பு:
விக்ரம், தான் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும், அதற்கு தனது 100 சதவீத உழைப்பை கொடுப்பார் என தெரியும். அந்த வகையில் இந்த படத்திலும் தனது முழு உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரு குடும்பஸ்தனாக, மனைவியை காதலிக்கும் இடத்தில், தனது குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு மனநிலை என அனைத்திலும் பெஸ்ட் ஆக நடித்திருந்தார். 

விக்ரமின் காதல் மனைவியாக துஷாரா விஜய்யன் அப்ளாச் அள்ளும் நடிப்பு காட்டுகிறார். தன் கனவனுகும், வில்லன்களுக்கும் இடையே என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழிக்கும் இடத்திலும், ரசிகர்களின் மனங்களை கலங்க வைக்கிறார்.எஸ்.பி-யாக எஸ்.ஜே.சூர்யா சூழ்ச்சி, வன்மம், கோபம் என அனைத்து வித உணர்ச்சிகளையும் நமக்குள்ளும் கடத்தி திரையிலும் காண்பித்தனர்.

மிரட்டலான பின்னணி இசை!
வீர தீர சூரன் பாகம் 2 (Veera Dheera Sooran 2) படத்தில் பல காட்சிகளில், பின்னணி இசையே பேசுகிறது. ஜி.வி.பிரகாஷின் இசையே காட்சிகளை வேகமாக நகர்த்தியது. 

வீர தீர சூரன் பாகம் 2 ஓடிடி ரிலீஸ் தேதி:
இந்நிலையில் தற்போது வீர தீர சூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி (Veera Dheera Sooran 2 OTT Release Date) தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் ஏப்ரல் 24ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. எனவே திரையரங்கில் காண முடியாமல் இருந்தர்வர்கள் இப்போது நல்ல கதையுடன் கூடிய ஆக்ஷன் த்ரில்லர் படத்தை, கொஞ்சம் பொறுமையுடன் பார்க்க நினைத்தால், கண்டிப்பாக வீர தீர சூரன் பாகம் 2 படத்தை ஓடிடி தளத்தில் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி காணலாம்.

மேலும் படிக்க | Good Bad Ugly வெற்றி விழாவில் அஜித் பற்றி ஆதிக் கூறிய முக்கிய விஷயம்! 

மேலும் படிக்க | கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: என்னை குரங்குனு சொல்லு, அஞ்சலியை முட்டி போட வைத்து கொடுமைப்படுத்தும் மகேஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News