சூரி-விஜய் மில்டன் இணைந்து வெளியிட்ட “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக்!

Mahaasena Movie First Look : நடிகர் சூரி, இயக்குனர் விஜய் மில்டன் இணைந்து வெளியிட்ட “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Written by - Yuvashree | Last Updated : Oct 14, 2025, 08:17 PM IST
சூரி-விஜய் மில்டன் இணைந்து வெளியிட்ட “மகாசேனா” படத்தின் பர்ஸ்ட் லுக்!

Mahaasena Movie First Look : மருதம் புரொடக்ஷன்ஸ் புதிய படைப்பு இயற்கை, ஆன்மீகம் மற்றும் காடு புராணத்தை மையமாகக் கொண்ட அதிரடி திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு;

Add Zee News as a Preferred Source

2023ஆம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் “இராக்கதன்” படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த மிகப்பெரிய முயற்சியாக “மகாசேனா” என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது.

இந்த படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் நடிகர் சூரி மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோரால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. காடு மற்றும் ஆன்மீக நிழல்களில் உருவான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படம் பற்றி,இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கும் மகாசேனா படம், இயற்கை, ஆன்மீகம் மற்றும் புராணக் கூறுகளை இணைக்கும் ஒரு காடு சார்ந்த ஆக்சன்-திரில்லர் ஆகும். 

மனித பேராசைக்கும், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் இடையிலான நிலையான மோதலை, குடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய இடங்களில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் 90% பகுதி உண்மையான காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட காட்சியமைப்புடன் கூடிய இந்த படம், திருவிழா காட்சிகளை மையமாகக் கொண்ட கிளைமாக்ஸ், பழங்குடி இசையையும் பக்தி இசையையும் இணைக்கும் புது இசை அனுபவத்தையும் தருகிறது.

படத்திற்காக இசையமைத்துள்ளவர்கள் ஏ. பிரவீன் குமார் மற்றும் எஸ்.என். அருணகிரி.
பாடகர்கள் — வைகோம் விஜயலட்சுமி, வி.எம். மஹாலிங்கம், வி.வி. பிரசன்னா, பிரியங்கா என்.கே.
படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும் காடின் உயிரோட்டத்தையும், ஆன்மீக பிணைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்ஃப்ரெட் ஜோஸ், இளக்கியா, விஜய் சியோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், படத்தின் முக்கியமும் குறியீடாகவும் யானை சேனா முக்கியமான வேடத்தில் நடிக்கிறது.

இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் கூறுகையில்,“மஹாசேனஹா ஒரு காடு பற்றிய கதை மட்டும் அல்ல — அது மனிதன், இயற்கை, தெய்வீகம் ஆகியவற்றின் இடையிலான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் பற்றி பேசும் படம். பேராசை இந்த தெய்வீக சமநிலையை குலைக்கிறது. ஆன்மீகம் அதைக் காப்பாற்றுகிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் இயற்கைக்கான மரியாதையையும், உயிரின் தெய்வீகத்தையும் பிரதிபலிக்கிறது. இந்தக் காடு தானே ஒரு கதாபாத்திரமாக உயிருடன், உணர்வுடன், ஆற்றலுடன் உள்ளது. 

மருதம் புரொடக்ஷன்ஸ் தனது முந்தய படைப்பு “இராக்கதன்” போலவே, மகாசேனாவிலும் வலிமையான, காட்சியளவில் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறது. ஆன்மீகம், அதிரடி, உணர்ச்சி என இந்த மூன்றையும் இணைத்து உருவாகும் மகாசேனா படம், மலைகளின் மணமும், காடுகளின் தாளமும், நம்பிக்கையின் துடிப்பும் கொண்ட ஒரு மறக்கமுடியாத திரைப்பட அனுபவமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம்.

மேலும் படிக்க | ரஜினிகாந்துக்கு அமிதாப் பச்சன் கொடுத்த 3 அட்வைஸ்! கேட்காததால் வந்த பிரச்சனை..

மேலும் படிக்க | 2025ல் தமிழ்நாட்டில் ஹிட் ஆன பிறமொழி படங்கள்! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News