Kamal Haasan Banana Joke With Trisha Controversy : மணி ரத்னம்-கமல்ஹாசன் இருவரும் 38 ஆண்டுகளுக்கு பின்பு இணைந்து பணிபுரியும் படம், தக் லைஃப். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இதில் த்ரிஷா பேசியதை வைத்து கமல்ஹாசன் பேசியிருக்கும் ஒரு விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தக் லைஃப்:
தமிழில் உருவாகி வரும் கேங்க்ஸ்டர் ட்ராமா படம், தக் லைஃப். 38 ஆண்டுகளுக்கு முன்பு நாயகன் படத்தில் முதல் தடவையாக கைக்கோர்த்த இயக்குநர் மணி ரத்னமும்-கமல் ஹாசனும் அதன் பிறகு எந்த படத்திலும் ஒன்றாக பணிபுரியவில்லை. அவர்களால் இப்போது தக் லைஃப் படம் மூலமாகத்தான் கைக்கோர்க்க முடிந்தது. இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
தக் லைஃப் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடலான ‘ஜிங்குச்சா’ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் சிலம்பரசன், கமல்ஹாசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தக் லைஃப் ப்ரமோஷன்:
தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அன்றிலிருந்து இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளும் ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், மேடையில் த்ரிஷா, கமல்ஹாசன், சிலம்பரசன் அனைவரும் அமர்ந்திருக்க, கூட்டத்திற்கு நடுவே த்ரிஷா சொன்ன ஒரு விஷயத்தை வைத்து கமல் ஜோக் அடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழைப்பழ ஜோக்!
நம் ஊரில் மட்டுமல்ல, உலகளவில் வாழைப்பழத்தை வைத்து பலர் 18+ ஜோக் அடிப்பர். தக் லைஃப் பட ப்ரமோஷனில், த்ரிஷா தனக்கு பிடித்த தென்னிந்திய உணவு பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, “வாழைப்பழத்தை வறுத்து சாப்பிடிவோமே, அதன் பெயர் என்ன..?” என்று அவர் கேட்க அருகில் இருந்த அசோக் செல்வன் “பழம்பொரி” என்று பதில் கொடுத்தார். அது ஒரு கேரள உணவாவகும். உடனே அருகில் இருந்த கமல், “பெயர் தெரியாது, வாயில மட்டும் நுழைச்சுப்பாங்க..” என்று கூற மேடையில் இருந்தவர்கள் மட்டுமல்லாது கீழே இருந்த இளைஞர்கள் கூட்டமும் பெரிதாக சிரித்தது. பின்னால் இருந்து ஒருவர், “என்ன ஆண்டவன் டார்க்கா பேசுறாரு..” என்கிறார். கமல், அதன் பின்பு த்ரிஷாவின் தொடையில் தட்டிக்கொடுக்கிறார்.
Thug from #KamalHaasan to #Trisha
Trisha: I like Boiled Banana, what's the name of tha....Pazhampori
KH: Per Solla Theriyathu,...Ana Vaila Nolanjurum pic.twitter.com/M2xsCvzFuQ— AmuthaBharathi (@CinemaWithAB) April 21, 2025
நெட்டிசன்கள் கொந்தளிப்பு..
தக் லைஃப் ப்ரமோஷன் வீடியோ வைரலானதை தொடர்ந்து, கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், அனைவரும் ரீல்ஸ் மற்றும் யூடியூபை பார்த்து கெட்டுப்போய் விட்டதாகவும், அவர் ஒற்றை அர்த்தத்தில் அதை கூறியிருந்தாலும் நாம் அதை இரட்டை அர்த்தமாக எடுத்துக்கொள்வதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.
சமீபத்தில், சிரஞ்சீவியும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கினார். தன் வீட்டில் அனைத்தும் பெண் குழந்தைகளாக இருப்பதாகவும், இதனால் தனக்கு பல சமயங்களில் பெண் விடுதியில் இருக்கும் வார்டன் போல உணர்வு ஏற்படுவதாகவும் கூறியிருந்தார். மேலும், தனது மகன் ராம் சரணிடம் “பெண் குழந்தையை பெற்றுக்கொள்ளாதே, ஆண் வாரிசை பெற்று வா” என்று கூறியதையும் பெருமையாக குறிப்பிட்டார். இப்போது கமல் இப்படி பேசியதை கேட்கும் ரசிகர்கள், “அப்போது சிரஞ்சீவியை மட்டும் அப்படி அடித்தீர்கள், இவரை ஏன் யாரும் கேட்கவில்லை?” என்று கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | 41 வயதில் கல்யாணமா? திருமணம் குறித்து பேசிய நடிகை த்ரிஷா..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









