இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரானவர் நடிகர் கமல்ஹாசன். இவர் பல புதிய விஷயங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர். கமல்ஹாசனுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது வரை 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் படங்களில் நடிப்பதை தவிர தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
அந்தவகையில் கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடினர். தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக 80,90களில் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கமலை போன்று குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருக்கிறார். எம்ஜிஆர் , சிவாஜி படங்களில் பெரும்பாலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி என பிற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 5 வருடங்கள் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி அதன் பிறகுதான் ஹிந்தியில் தன்னுடைய ஆளுமையை ஆரம்பித்தார். அங்கு பல படங்களில் நடித்து பாலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராகவே மாறினார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி அங்கு தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். அவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். கடந்த 2018ம் ஆண்டில் ஹோட்டலில் இருந்த குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவியைப் பற்றிய ஒரு அரிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'ஹே ராம்' படத்தை சாதாரண ரசிகரைப் போல திரையரங்கில் பார்க்க ஸ்ரீதேவி புர்கா அணிந்து வந்தாராம். இந்தச் சம்பவத்தை கமல்ஹாசன் 2000 ஆம் ஆண்டு 'ஹே ராம்' படம் வெளியான சமயத்தில், அதன் விளம்பரத்தின் போது பகிர்ந்து கொண்டார்.
ஸ்ரீதேவிக்கு இந்த படத்தை சென்னையில் இருக்கும் 'சத்யம் சினிமாஸ்' திரையரங்கில் பார்க்க ஆசையாக இருந்ததால் அதனால் அப்போது அவர் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார். இதன் காரணமாக தான் அவர் புர்கா அணிந்து படம் பார்த்ததாகவும், படத்தை பார்த்து முடித்துவிட்டு கமல்ஹாசனுக்கு போன் செய்து படம் குறித்தும் பெருமையாக பேசியிருந்ததாகவும் தகவல் வெளியானது.
தமிழில் உருவாகி வரும் கேங்க்ஸ்டர் ட்ராமா படம், தக் லைஃப். 38 ஆண்டுகளுக்கு முன்பு நாயகன் படத்தில் முதல் தடவையாக கைக்கோர்த்த இயக்குநர் மணி ரத்னமும்-கமல் ஹாசனும் அதன் பிறகு எந்த படத்திலும் ஒன்றாக பணிபுரியவில்லை. அவர்களால் இப்போது தக் லைஃப் படம் மூலமாகத்தான் கைக்கோர்க்க முடிந்தது. இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
தக் லைஃப் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடலான ‘ஜிங்குச்சா’ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் சிலம்பரசன், கமல்ஹாசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | யோகி பாபு நடிகராக இருக்கவே தகுதியற்றவர் - பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!
மேலும் படிக்க | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்! பைசன் ரிலீஸ் தேதி இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









