Trump Recreating Scene From Vijay Master Movie : நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தின் காட்சியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரீ-கிரியேட் செய்துள்ளதாக ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Trump Recreating Scene From Vijay Master Movie : தமிழ் திரையுகளில் முன்னணி நடிகராக விளங்குபவர், விஜய். தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து முழு நேரமாக அரசியலில் களமிறங்க இருக்கிறார். இந்த நிலையில், அவரது படத்தின் ஒரு காட்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரீ-கிரியேட் செய்துள்ளதாக கூறி ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மாஸ்டர் திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் முதன்முதலாக நடித்திருந்த படம் மாஸ்டர். 2021 ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் அவர் JD எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் அவரது கேரக்டர் எப்போதும் தண்ணி வண்டியாக இருக்கும். இதில் அவருக்கு விஜய் சேதுபதி நடித்திருப்பார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஜயை விட, அவருக்கு வில்லனாக வந்த விஜய் சேதுபதிக்கு தான் வெயிட் அதிகமாக இருக்கும்.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் கிடைத்தது. அதுமட்டுமன்றி, இந்த படத்தின் சில காட்சிகள் பின்னாளில் நகைச்சுவைக்குரிய மீம் மெட்டீரியல்களாகவும் மாறின. அப்படிப்பட்ட ஒரு காட்சியை தான் தற்போது டிரம்ப் ரீ-கிரியேட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஐகானிக் காட்சி..
மாஸ்டர் திரைப்படத்தின் இறுதியில், வில்லன் பவானியும், ஹீரோ JDம் நேருக்கு நேர் முகத்திற்கு நேர் முகத்திற்கு நேராக நினைத்துக் கொண்டு, sledging செய்வது போன்ற காட்சிய இடம் பெற்றிருக்கும். இதன் bloopers காட்சியில் இருவரும் அப்படி நடிக்கும் போது சிரித்துக் கொள்வர். தற்போது இதைத்தான் ட்ரம்ப் தனது வெள்ளை மாளிகையில் செய்து இருக்கிறார்.
அந்த வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் https://www.instagram.com/reel/DJyYweUPg0M/?utm_source=ig_web_button_share_sheet&igsh=amttdml1ZnlxZGpx
அவரும் அவருக்கு எதிரில் இருந்த நபரும் விஜய்-விஜய் சேதுபதி போல போல சிரித்துக் கொள்ளும் காட்சியை இணையத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். இதை பார்த்த பலர், விஜய்யின் பட காட்சியை ட்ரம்ப் அப்படியே வீடியோவாக ரீ-கிரியேட் செய்து வெளியிட்டுள்ளதாக ஜோக் அடித்துள்ளனர். ஒரு சிலர், இந்த காட்சியே ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்து திருடப்பட்டு ரீ-கிரியேட் செய்யப்பட்டதுதான் என்று கூறி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையவாசிகள் இடையே வைரலாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ