)
Zee Tamil Parijatham Serial Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம்.
இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் விஷால் ரெஸ்டாரன்ட் வர அங்கு இசை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்றது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது விஷால் இசை பார்த்து நீ தான் அந்த பொண்ணா என்று அதிர்ச்சியாக இசை நான் பொண்ணு இல்ல.. என் தங்கச்சி தான் கல்யாண பொண்ணு, அவளுக்காகத்தான் நான் இங்கு வந்து வந்திருக்கேன் என்று சமாதானம் செய்து அவனை உட்கார வைக்கிறாள். அதன் பிறகு இசை இங்க சாம்பார் இட்லி நல்லா இருக்கும் என்று சொல்ல விஷால் தன்னை கலாய்ப்பதாக நினைத்து கோபப்பட இசை இல்லை உண்மையாகவே சொல்கிறேன் என்று ஆர்டர் செய்கிறாள்.
விஷால் சாம்பார் இட்லி சாப்பிட்ட மாதிரியே இசையிடம் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை அதை நீங்களே உங்கள் வீட்டில் சொல்லிடுங்க என்று சொல்ல ஆசை அவன் முகத்தை கவனிக்காததால் அவன் சொன்னது கேட்காமல் போகிறது. அடுத்ததாக இசை எல்லாம் ஓகே தானே என்று கேட்க விஷால் சாம்பார் இட்லியை பற்றி கேட்பதாக நினைத்து ஓகே என்று சொல்ல இசை அங்கிருந்து கிளம்பி வருகிறாள். மறுபக்கம் வர்ஷினி மற்றும் ராகவ் என இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். ராகவ் வர்ஷினி தான் கல்யாண பெண் என்று நினைத்து பேசுகிறான்.
வர்ஷினிக்கு ராகவ்வை பார்த்ததும் பிடித்து பார்க்க அவளும் தன்னுடைய அக்காவுக்காக வந்திருக்கும் விஷயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். இதையடுத்து இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போகிறது. அதன் பிறகு இசை வர்ஷினி சந்திக்க வர்ஷினி அவரை கட்டிப்பிடித்து சாரி அக்கா எனக்கு ராகவ்வை ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்கிறாள். பிறகு வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்ல ருக்குமணி என்னடி பண்ணி வச்சிருக்கீங்க என்று கோபப்படுகிறாள். பிறகு ராகவ் மற்றும் வர்ஷினிக்கு ஜாதக பொருத்தம் பார்க்க பொருத்தம் நன்றாக இருப்பதால் நிம்மதி அடைகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ