சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக கோடையில் வெளியாகிறது. இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகிலனர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Had to come back from a break because my team of #IranduVaanam decided to drop this beautiful poster..
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 6, 2026
We are coming to theatres this summer. A magical ride loading... pic.twitter.com/TKf0IQqFvE
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தொழில்நுட்ப காரணங்களாலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்த வருடம் வழங்க இருக்கிறது.
இரண்டு வானங்கள், ஒரே பார்வை, பேரார்வத்தோடு இயங்கும் உலகம் என இந்த கோடையில் திரையரங்குகளில் வெளியாகிறது ‘இரண்டு வானம்’.
தயாரிப்பு: டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன்,
இயக்கம்: ராம்குமார்,
இசை: திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவு: தினேஷ் கே. பாபு,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை இயக்கம்: கோபி ஆனந்த்,
ஆடை வடிவமைப்பாளர்: ஏ. கீர்த்தி வாசன்,
ஆக்ஷன்: விக்கி,
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: ஹரிஹர சுதன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ