விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அவற்றில் முதன்மையானதாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கடந்த எபிசோடில் தொகுப்பாளினியாக இருந்த விஜே பிரியங்காவிற்கு பதிலாக மகாநதி சீரியல் கதாநாயகி லட்சுமி பிரியா தொகுப்பாளினியாக கலந்து கொண்டுள்ளார். முதல் எபிசோடிலேயே இவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் இனி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிரியங்கா தொகுப்பாளினியாக வருவாரா? இல்லையா? என்ற கவலையும் பிரியங்கா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புது தொகுப்பாளர்! பிரியங்காவிற்கு பதில் இவரா?

VJ பிரியங்கா மாற்றப்பட்டாரா?
விஜய் டிவியில் நீண்ட ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. கிட்டத்தட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளினியாக இருந்து பெயர் பெற்றவர் பிரியங்கா. இவரும் மாகாபாவும் இணைந்து தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் மக்களிடையே ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிரியங்கா விலகியுள்ளாரா என்ற கேள்வி வர தொடங்கி உள்ளது. கடந்த வாரம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பிரியங்காவிற்கு பதிலாக லட்சுமி பிரியா தொகுத்து வழங்கினார். இதனால் இனி பிரியங்கா நிகழ்ச்சிக்கு வர மாட்டாரா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் வர தொடங்கியது. மறுபுறம் சிலர் லட்சுமி பிரியாவே இனி இருக்கட்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இனி புது தொகுப்பாளினியா?
விஜய் டிவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாகாபா மற்றும் லட்சுமி பிரியா தொகுத்து வழங்குவது போல புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. அதற்கு கமெண்டில் ரசிகர்கள் இனி லட்சுமி பிரியாவே தொகுப்பாளினியாக இருக்கட்டும், இவர் சிறப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு வாரம் மட்டுமே லட்சுமி பிரியா தொகுப்பாளனாக வருவார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் பிரியங்காவிற்கு திருமணம் நடைபெற்றது என்பதால் அவரால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், அவருக்கு பதிலாக தான் லட்சுமி பிரியா கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் திருமணம் ஆகி உள்ளதால் இனி குடும்ப வாழ்க்கையில் பிரியங்கா கவனம் செலுத்த போகிறார், இனி எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
மேலும் படிக்க | விஜய் டிவியில் இருந்து வெளியேறும் ஸ்டார் தாெகுப்பாளர்கள்?! யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









