Vijay Deverakonda Kissed Rashmika Video : கடந்த சில நாட்களாகவே இணையம் முழுவதும் ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா ஜோடி குறித்த தகவல்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் இவர்கள் தங்கள் காதலை அறிவிக்கவில்லை. இருப்பினும், தாங்கள் காதலிக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் ஒரு விஷயத்தை செய்திருக்கின்றனர். அது என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா ஜோடி:
கன்னட சினிமா மூலம், திரையுகிற்கு அறிமுகமான ராஷ்மிகா, இப்போது இந்திய அளவில் டாப் 5 நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார். அதற்கு பெரும் காரணமாக அமைந்தது, தெலுங்கில் அவர் நடித்த சில ஹிட் படங்கள்தான். விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம், நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்படம் ஹிட் ஆக முதல் காரணம், ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டாவின் கெமிஸ்ட்ரிதான். திரையில் காதலர்களாக ஜாெலித்த இவர்கள், நிஜத்திலும் காதலர்கள்தான் என்று கிசுகிசு எழுந்தது. அடுத்ததாக ‘டியர் காமரேட்’ படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்தனர். இதையடுத்து இவர்கள் காதலிக்கின்றனர் என்பதை ரசிகர்களே உறுதி செய்து கொண்னர்.
பாெது வெளியில் முத்தம்:
ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா ஜோடி இன்னும் தங்களின் காதலையோ தங்களின் உறவு குறித்தாே வெளியில் மூச்சு கூட விடவில்லை. இருவரும், சமீபத்தில் தி கேர்ள்ஃப்ரெண்ட் படத்தின் வெற்றிவிழாவில் சந்தித்து கொண்டனர். அப்போது, யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவை பார்த்ததும் சிரித்துக்கொண்டே அவர் கையை பிடித்து, கையில் முத்தம் கொடுக்கிறார். இன்னும் தங்களின் உறவு குறித்து இருவரும் வெளியில் தெரிவிக்காத நிலையில், இவர்களை சுற்றி 1000 பேர் இருப்பினும் பப்ளிக்காக இப்படி இவர் முத்தம் கொடுத்தது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ:
ராஷ்மிகா மந்தனாவிற்கு விஜய் தேவரகொண்டா கையில் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#VijayDeverakonda greeted #RashmikaMandanna with a kiss on the Hand. pic.twitter.com/usYulYYpaD
— Matters Of Movies (@MattersOfMovies) November 12, 2025
நிச்சயதார்த்தம்..திருமணம்..!
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பதாகவும், இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கு வெக்கேஷன் செல்வதாகவும் தகவல்கள் பரவியது. இவர்களே, தங்களின் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மூலமாக ‘நாங்கள் ஒன்றாகதான் இருக்கிறோம்’ என்பது போல ஹிண்ட் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இவர்களுக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இருவரும் இப்போது என்ன செய்கிறார்கள்?
ராஷ்மிகா மந்தனாவின் மார்கெட், ‘அனிமல்’ படத்திற்கு பிறகு தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. தொடர்ந்து சவ்வா, தி கேர்ள் பிரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது அவர் இந்தியாவின் ஹிட் நாயகியாக இருக்கிறார். அதே சமயத்தில் விஜய் தேவரகொண்டாவின் படங்கள் சரிவை சந்தித்து வருகின்றன. அவர் அடுத்ததாக ஹிட் படம் கொடுக்கப்போவது எப்போது என்கிற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா வயது வித்தியாசம் என்ன? அடேங்கப்பா..இத்தனையா?
மேலும் படிக்க | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் எங்கே, எப்போது? வெளியான விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









