பிக்பாஸ் 9 : கண் வீங்கிய நிலையில் VJ Paaru! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..வைரல் வீடியாே..

Bigg Boss VJ Parvathy Got Hurt : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ஒரு டாஸ்க், தற்போது விபரீத்தத்தில் முடிந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Nov 10, 2025, 03:58 PM IST
  • ரணகளமான பிக்பாஸ் வீடு
  • விஜே பாருவுக்கு வந்த நிலை..
  • வைரல் வீடியோ..
பிக்பாஸ் 9 : கண் வீங்கிய நிலையில் VJ Paaru! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..வைரல் வீடியாே..

Bigg Boss VJ Parvathy Got Hurt : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் நடத்தப்பட்ட டாஸ்க் ஒன்று விபரீதத்தில் முடிந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன், சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதில் முக்கிய பாேட்டியாளராக உள்நுழைந்தவர்தான் விஜே பார்வதி. இவருக்கு தற்போது கண்களில் அடிப்பட்டு வீங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்கள் வீங்கிய நிலையில் விஜே பாரு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் தற்போது வாட்டர் பாட்டில் டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தனித்தனியாக அனைவரும்பிரிந்து விளையாடும் இந்த ஆட்டத்தில், எதிராளி பாதுகாக்கும் அவரது தண்ணீர் பாட்டிலை அவரிடம் மல்லுக்கட்டி தன்வசப்படுத்தி கொள்வது டாஸ்க் ஆக இருக்கிறது. இதில், விஜே பார்வதி, திவ்யா கணேஷ், சபரி உள்ளிட்டோர் எதிரெதிர் அணிகளாக விளையாடினர். அப்போது சபரியிடம் பாட்டிலை மல்லுக்கட்டி பறிக்கும் போது, விஜே பார்வதியின் கண்களில் அடிப்பட்டுள்ளது.

அடிப்பட்ட மாத்திரத்தில் அவரது கண்களும் பெரிதாக வீங்கி விட்டது. வலியால் துடித்த பாரு, கிடைத்த கேப்பில் ஒரு பாட்டிலையும் தன்வசப்படுத்திக்கொண்டார். பின்னர் கண் வலிக்கிறது என்று கூறி அழுத அவர், கண்ணில் லென்ஸ் போட்டிருப்பதாக கூறினார்.

வைரலாகும் வீடியோ..

தற்போது பார்வதிக்கு அடிப்பட்ட வீடியோவானது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாட்டிலை எடுக்க அவர் முயற்சிப்பதும் அப்போது சபரியால் அவருக்கு அடிபடுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வரும் ரசிகர்கள், சபரி, பாருவிடம் மன்னிப்பு கேட்கவே இல்லை என்பதை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ரணகளமான வீடு!

பிக்பாஸ் வீடு, கடந்த சில நாட்களாகவே ரணகள வீடாக மாறியிருக்கிறது. காரணம், புதிதாக இந்த வீட்டிற்குள் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இதில் பிரஜினும் சாண்ட்ராவும் கணவன் மனைவி. கூடவே, அமித் பார்கவ் மற்றும் திவ்யா கணேஷ் உள்ளிட்ட இருவரும் நுழைந்தனர். இதில், ஆரம்பத்தில் அனைவரும் வலுவான போட்டியாளர்களாக பார்க்கப்பட்டாலும், இப்போது நால்வரும் பிற போட்டியாளர்களுள் ஒருவராக மாறி விட்டனர்.

இருவர் எவிக்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில், கடந்த சனி-ஞாயிறு எபிசோட் டபுள் எவிக்ஷன் எபிசோடாக அமைந்தது. ‘தமிழ்-கொரியன் பையன்’ என்று அழைக்கப்பட்ட துஷார், எவிக்ட் ஆனார். இவரைத்தொடர்ந்து, ஞாயிறு எபிசோடில் ராஜ் பிரவீன் எவிக்ட் செய்யப்பட்டார். 

ஸ்கூலாக மாறிய பிக்பாஸ்..

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதற்கு முந்தைய சீசன்களை விட டிஆர்பி ரேட்டிங்கில் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை ஏற்றுவதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் என்னென்னவோ செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் 18+ கண்டெண்ட்கள் நிறைய இருந்ததால், பலர் இதை பார்ப்பதை தவிர்த்தனர். அதே போல, விஜய் சேதுபதி வாரா வாரம் ஸ்கூல் டீச்சர் பள்ளி குழந்தைகளை திட்டுவது போல, திட்டுவதாகவும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | பிக்பாஸ் 9 : இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றம்? யார் அந்த இருவர்?

மேலும் படிக்க | தமிழ் பிக்பாஸ் நடைபெறும் இடத்தில் போலீஸ் குவிப்பு! என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News