)
Madharaasi Trailer : தி கோட் படத்தில் விஜய்யிடமிருந்து துப்பாக்கியை வாங்கிய சிவகார்த்திகேயன், இப்போது சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் மதராஸி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
மதராஸி ட்ரைலர்:
மதராஸி திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மாஸாக இருப்பதால், கண்டிப்பாக படம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துப்பாக்கி திரைப்படத்தின் வில்லன் இதில், “துப்பாக்கி எவன் கையில இருந்தாலும், வில்லன் நான்தான்டா..” என்று டைலாக் பேசியிருக்கிறார். படம், தமிழ்நாடு-சென்னையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. கடத்தல், அதை தடுக்கும் ஹீரோவை வைத்து கதை எழுதப்பட்டுள்ளது போல தெரிகிறது. இருப்பினும், படம் வெளியாகும் போதுதான் படம் குறித்த முழு தகவலும் வெளியாகும்.
ரிலீஸ் எப்போ?
மதராஸி திரைப்படம், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதுமுகம் ருக்மினி வசந்த் நடிக்கிறார். துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜாம்வால், இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இசையமைப்பாளரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அனிருத், இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இதுவரை இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகியிருக்கிறது. முதலாவதாக வெளியான சலம்பல பாடல் பெரிய ஹிட் அடித்ததோடு, அடுத்ததாக வழியிரேன் பாடல் வெளியானது. இவை படத்திற்கு நல்ல ப்ரமோஷனாக இருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ