Sinners OTT Platform Oscars 2026 : சமீபத்தில், ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் ஒர படம் இடம் பெற்றிருக்கிறது. அது என்ன படம் என்பதையும், அந்த படம் ஏன் இத்தனை பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு பார்க்கலாம்.
Sinners திரைப்படம்:
2025ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படங்களுள் ஒன்றாக கருதப்பட்டது ‘சின்னர்ஸ்’. இந்த படத்தில் மைக்கில் பி ஜார்டன் இரு வேடங்களில் நடித்திருந்தார். ஜேக் ஓ கானல், வும்னி மொசாகு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
கதை என்ன?
சின்னர்ஸ் திரைப்படம், ஹாரர் பிரிவை சேர்ந்த திரைப்படமாகும். இப்படம், 1932ல் நடப்பது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டையர்களாக இருக்கும் Smoke மற்றும் Stack, தங்கள் இனத்தை சேர்ந்தவர்களுக்காக (கருப்பினத்தவர்) ஒரு பெரிய திட்டத்தை தொடங்க வேண்டுமென சொந்த ஊர்க்கு வருகின்றனர். அப்படி அவர்கள் வரும் போது ரத்தக்காட்டேரி உள்ளிட்ட சில அமானுஷ்யமான விஷயங்களை சந்திக்கின்றனர். இதை களைந்து, அவர்கள் எப்படி தங்கள் திட்டத்தில் வெற்றி பெருகின்றனர் என்பதுதான் கதை.
சின்னர்ஸ் திரைப்படத்தை ரயான் கூக்ளர் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர், மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர், இந்த படத்தில், கருப்பினத்தவரை சந்தித்த/ சந்தித்து வரும் பிரிவினைகளை, ஹாரர் எலிமெண்டுடன் நன்றாகவே காண்பித்திருந்ததாக பாராட்டு பெற்றார். இதையடுத்து, இந்த படம் 16 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
16 பிரிவுகளில் ஆஸ்கார் விருது:
ஆஸ்காரில் முதன்முறையாக ஒரு படத்தை 16 விருதுகளில் நாமினேட் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த லீடிங் நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உள்பட 16 பிரிவுகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது.
எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
சின்னர்ஸ் திரைப்படம், கண்டிப்பாக ஆஸ்கார் விருதை தட்டிச்செல்லும் என்று கூறப்படும் நிலையில், அப்படத்தை இந்தியாவில் எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த படத்தை, இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.
டைட்டானிக் பட சாதனையை முறியடித்தது!
1997ல் வெளியான டைட்டானிக் திரைப்படம், அந்த சமயத்தில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது இந்த படத்தையும் ‘சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இசை’ உள்பட சில பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்திருந்தனர். ஆனால், 14 பிரிவுகளில் மட்டும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியில் இப்படம் 11 விருதுகளை தட்டிச்சென்றது. இதே போல சின்னர்ஸ் திரைப்படத்திற்கும் நிறைய விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் வசூல்:
சின்னர்ஸ் திரைப்படம், உலகளவில் நன்றாக திரையரங்குகளில் ஓடிய படமாகும். இந்த படம், மொத்தம் 368 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்திருந்தது. இது இந்திய ரூபாயின் மதிப்பின் படி 3,080 கோடி ஆகும். இப்படம் இந்தியாவில் மட்டும் 4 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மனைவியின் தாய்ப்பாலை குடித்த நடிகர்! இப்படி ஓபனா சொல்லிட்டாரே-யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









