குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக ஈடுபட்டிருந்தவர்கள் தன்னை கானா வினாேத், புகழ் உள்ளிட்ட பலர் தாக்கியதாக திவாகர் புகாரளித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னை கானா வினோத், புகழ் உள்ளிட்டோர் தாக்கியதாக திவாகர் தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி 7:
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கிறது குக் வித் காேமாளி. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதன் முதல் எபிசோட், கடந்த வாரம் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. இதில் நடுவர்களாக செஃப் தாமு, கெளசிக், மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளிட்டோர் இருக்கின்றனர். புதிய நடுவராக நடிகை ரோஜா இணைந்திருக்கிறார். இதுவரை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனித்தனி ஆளாகத்தான் போட்டியாளர்கள் பங்கேற்பர். ஆனால் இந்த முறை ஜோடிகளாக போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். கானா வினோத் மற்றும் அவரது மனைவி, அனிருதன் மற்றும் அவரது மனைவி என்று பல ஜோடிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
திவாகரை தாக்கிய கானா வினோத்-புகழ்?
இணையத்தில் தன்னை “நடிப்பு அரக்கன்” என்று கூறிக்கொள்ளும் நபராக இருப்பவர் திவாகர். இவர் சூர்யாவின் ஒரு சீனை ரீ-கிரியேட் செய்ததால் அவரை “வாட்டர்மெலன் ஸ்டார்” என்று அழைப்பதுண்டு. இந்த நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் சில நாட்களிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். இவருக்கும் கானா வினோத்திற்கும் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே அடிக்கடி முட்டிக்கொள்ளும். அப்போதிலிருந்தே அவர் “கானா வினோத் நல்ல மனிதர் கிடையாது” என்று கூறி வந்தார்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் திவாகர் கெஸ்டாக கலந்து கொள்ளும் எபிசோடின் ஷூட்டிங் நேற்று நடந்திருக்கிறது. அதில் தான் கலந்து கொண்ட போது புகழ் தன்னை காலையில் இருந்தே முறைத்துக்கொண்டே இருந்ததாகவும், அப்போது தகறாறு ஏற்பட்டதில் தன்னை புகழ், மாகப ஆனந்த் மற்றும் அன்சார் உள்ளிட்ட மூன்று பேரும் தாக்கியதாகவும் திவாகர் வீடியோவில் பேசியிருக்கிறார். கூடவே, மாகப ஆனந்த் குடி போதையில் இரும்பு ராட் வைத்து தன்னை தாக்கியதாகவும், இதனால் தனக்கு ரத்தக்காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இவிபி அருகில் உள்ள நஸ்ரேத் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பதாக கூறியிருக்கும் திவாகர், தனக்கு பின்னால் 8 கோடி மக்கள் இருப்பதாகவும் தான் கண்டிப்பாக சினிமாவில் ஒரு ஹீரோவாக வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
#Diwakar file police complaint on CWC Pugazh #GanaVinoth & Ma Ka Pa #CookWithComali #BiggBossTamil9 pic.twitter.com/gxgnhOgxOF
— BB Mama (@SriniMama1) April 11, 2026
“எல்லாம் கண் திருஷ்டி”
சமீபத்தில் வெளியான LIK திரைப்படத்தில் தான் ஒரு கதாப்பாத்திரத்தில் வந்து விட்டதாகவும், அந்த பொறாமை தாங்க முடியாமல்தான் புகழ் தன்னை தாக்கியதாகவும் திவாகர் கூறியிருக்கிறார். மேலும், இவர்களால் எல்லாம் தன்னை அழிக்க முடியாது என்றும், யார் என்ன தவறு செய்தார்கள் என்பது அந்த இறைவனுக்கு தெரியும் என்றும் பேசியிருக்கிறார். இந்த சம்பவம், சின்னத்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ