குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், டான்சர் எனப் பல அவதாரங்களில் கலக்கி வருகிறார் சிம்பு.
இடையில் சில சறுக்கல்கள் மற்றும் தனிப்பட்ட சோகங்களைச் சந்தித்தாலும், வெங்கட் பிரபுவின் 'மாநாடு' படம் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்தார்.
தற்போது 'அரசன்' படத்தில் மும்முரமாக நடித்து வரும் சிம்பு, அடுத்தடுத்து பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
2026-ம் ஆண்டு நிலவரப்படி, சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு படத்தில் நடிப்பதற்கு சிம்பு ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.
சென்னையில் அவருக்குச் சொந்தமாகப் பல கோடிகள் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்ட சொகுசு பங்களா உள்ளது.
சமீபத்தில் துபாயிலும் ஒரு புதிய வில்லாவை வாங்கியுள்ளார் சிம்பு. அதுவும் நடிகர் அஜித்தின் வீட்டிற்கு அருகிலேயே இந்த வில்லா அமைந்துள்ளதாம்.