தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.
சமீபத்திய இந்த போட்டோஷூட்டில் அசாத்திய அழகு மற்றும் தனித்துவமான ஸ்டைலிங் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த ஸ்டில்களைப் பகிர்ந்துள்ளார்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த பூஜா ஹெக்டே, தாராள கவர்ச்சியுடன் மாடர்ன் மற்றும் ட்ரெண்டியான உடைகளில் போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார்.
போட்டோஷூட் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் குவித்து சோசியல் மீடியாவில் டாப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
நேர்த்தியான ஆடை தேர்வு, கச்சிதமான மேக்கப் மற்றும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையிலான உடலமைப்பு என இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு சர்வதேச ஃபேஷன் மேகசின் தரத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழில் ஜீவாவுடன் 'முகமூடி' படத்தில் அறிமுகமாகி, பின்னர் நெல்சன் இயக்கத்தில் விஜய் உடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்தார்.
தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் முக்கிய திரைப்படமான விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி.