பவா செல்லதுரைக்கு முன் பாதியிலேயே வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்

Vijaya Lakshmi
Oct 09,2023
';

ஸ்ரீ

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஸ்ரீ. அந்நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்த ஒருசில தினங்களிலேயே தனக்கு செட் ஆகவில்லை எனக்கூறி பாதியிலேயே வெளியேறிய முதல் போட்டியாளர் ஸ்ரீ ஆவார்.

';

பரணி

பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து பாதியில் வெளியேறிய இரண்டாவது போட்டியாளர் பரணி. தன்னை கார்னர் செய்கிறார்கள் எனக்கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதிலேயே வெளியேறினார் பரணி.

';

ஓவியா

பிக்பாஸ் முதலாவது சீசனில் இருந்து பாதிலேயே வெளியேறிய போட்டியாளர் ஓவியா. மன அழுத்தம் காரணமாக ஓவியா போட்டியில் இருந்து வெளியேறினார்.

';

சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற சரவணன், பெண்களை பற்றி சர்ச்சை கருத்துக்களை கூறியதால் அந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

';

மதுமிதா

பிக்பாஸ் 3வது சீசனில் சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய போட்டியாளர் மதுமிதா. அப்போது மதுமிதா கையை கத்தியால் அறுத்துக் கொண்டதன் காரணமாக அவரை பாதியிலேயே வெளியேற்றினார் பிக்பாஸ்.

';

நமீதா மாரிமுத்து

பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதன்முறையாக கலந்துகொண்ட திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து. 5வது சீசனில் கலந்துகொண்ட நமீதா ஆறு நாளிலேயே நிகழ்ச்சியில் இருந்து பாதிலேயே வெளியேறினார்.

';

ஜிபி முத்து

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் பங்கேற்றவர் ஜிபி முத்து. இவர் அந்நிகழ்ச்சியில் தன் வீட்டின் நியாபம் வந்துவிட்டதாக கூறி இரண்டாவது வாரமே வெளியேறினார்.

';

பவா செல்லதுரை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி ஒரு வாரமே ஆகும் நிலையில், உடல்நல பிரச்சனை காரணமாக தற்போது நிகழ்ச்சியில் இருந்து எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறி உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story