வசூல் ராஜா MBBS சாம்பு மவனுக்கு என்ன ஆச்சு? இப்போது எங்கே இருக்கிறார்?

Vasool Raja MBBS Actor Sambu Mavan : வசூல் ராஜா MBBS திரைப்படத்தில் ‘சாம்பு மவன்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர், என்ன ஆனார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 17, 2025, 11:33 AM IST
  • வசூல் ராஜா எம்பிபிஎஸ் நடிகர்..
  • சாம்பு மவனை நியாபகம் இருக்கா?
  • அவர் இப்போது எங்கே இருக்கிறார்?
வசூல் ராஜா MBBS சாம்பு மவனுக்கு என்ன ஆச்சு? இப்போது எங்கே இருக்கிறார்?

Vasool Raja MBBS Actor Sambu Mavan : பலருக்கும் ஃபேவரட் திரைப்படமாக இருக்கும் படங்களுள் ஒன்று, வசூல் ராஜா MBBS. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் பலருக்கு அச்சாய் மனதில் பதிந்திருக்கும். அப்படி, பலரை கவர்ந்த கதாப்பாத்திரம்தான், ‘சாம்பு மவன்’.

வசூல் ராஜா MBBS:

கமல்ஹாசன்-கிரேசி மோகனின் கூட்டணியில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி பெரிய ஹிட் அடித்துள்ளன. அப்படி காலத்தால் அழியாத காமெடி காவியமாக திகழ்ந்த ஒரு படம், வசூல் ராஜா MBBS. இந்த படத்தை, தமிழ் தொலைக்காட்சிகளில் ரிபீட் ஆக பல முறை போட்டிருக்கின்றனர். அப்படி போட்டதாலோ என்னவோ, பலரும் இப்போதும் அந்த படத்தை பார்க்கும் போது அதில் வரும் டைலாக்கை கூடவே சேர்ந்து பேசுவர்.

2003ஆம் ஆண்டில், சஞ்சய் தத் நடிப்பில் இந்தியில் வெளியான படம், முன்னா பாய் MBBS. இந்த படத்தின் தமிழ் தழுவல்தான், வசூல் ராஜா MBBS. இந்த படத்தை சரண் இயக்கியிருந்தார். இந்த படம், வெளியான போது பெரிய ஹிட் அடித்தது.

“சாம்பு மவனே..”

வசூல் ராஜா MBBS படத்தை அதிகமாக பார்த்தவர்களுக்கு தெரியும், அந்த படத்தில் அதிகம் உபயோகிக்கப்பட்ட பெயர்களுள் ‘சாம்பு மவன்’ என்பதும் ஒன்று என்று. கமல்ஹாசன், மருத்துவ கல்லூரியில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்லும் போது, ரூம்-மேட்டாக வருபவர்தான் இந்த சாம்பு மவன். “இனிமே நாம ரெண்டு பேரும் friends கோபிநாத்..” என கமல் கைகுலுக்க, “சார் என் பேரு சாமிநாதன்சார்” என்பார். பின்னர் கமலிடம் திட்டு வாங்கிய பிறகு “நீங்க சாமி, இல்ல கோபி எப்டி வேணாலும் கூப்டலாம் சார்” என்பார். தொடர்ந்து, “எங்கப்பா ஊர்லேந்து வரும் போது மட்டும் சாமின்னு கூப்டலாம்ல சார்..” என கேட்பார், அதற்கு கமல் “அப்போ உங்க அப்பா பேர மாத்திடலாமா?” என கேட்க “ஐயோ சாம்புன்னே இருக்கட்டும் சார்” என்பார். அப்படித்தான், கமல் இவருக்கு சாம்பு மவனே என்று பட்டப்பெயர் வைப்பார். 

பொதுவாக, சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருப்பவர்கள், லக் அடித்தால் மட்டும்தான் பெரிய நடிகராக வர முடியும். ஒரு சிலர் என்ன ஆனார்கள், எங்கு போனார்கள் என்பதே தெரியாமல் இருக்கும். அப்படி, அந்த ஒரே படத்தோடு காணாமல் பாேனவர்தான் இந்த சாம்பு மவன். அவருக்கு என்ன ஆனது தெரியுமா?

இறந்துவிட்டாரா?

அந்த காலத்தில்தான் ஒருவரை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமாமான விஷயமாக இருந்தது, ஆனால் இப்போது இணையதளம் வந்துவிட்டது அல்லவா? ஒருவரை கண்டுபிடிப்பது என்பது சுலபமாகி விட்டது. இந்த சாம்பு மவன் எங்கே சென்றார் என சில வருடங்களுக்கும் முன்பு reddit தளத்தில் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ஒருவர், அந்த நடிகர் தனது சகோதரரின் கிளாஸ் மேட்தான் என்றும், அவர் பெயர் ரத்தின சபாபதி என்றும் கூறியிருக்கிறார். மேலும், அவர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஒரு சிலர், ரத்தின சபாபதி வசூல் ராஜா MBBS திரைப்படத்தின் ரிலீஸிற்கு முன்பே இறந்து விட்டதாக கூறிவருகின்றனர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘தலைநகரம்’ பட நாயகியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்கார்னு பாருங்க..

மேலும் படிக்க | பிரியங்காவை திருமணம் செய்தவர் இவ்ளோ பெரிய ஆளா? இவர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News