காதல் குறித்த கேள்வி.. சட்டென தனுஷ் சொன்ன பதில்! ஷாக்கான ரசிகர்கள்..

What Is Love Dhanush Answer Fans Shock : தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரமோஷன் விழாவில், தனுஷிடம் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கொடுத்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Nov 15, 2025, 12:07 PM IST
  • காதல் குறித்த கேள்வி
  • தனுஷ் சொன்ன பதில்
  • ஷாக்கில் ரசிகர்கள்..
காதல் குறித்த கேள்வி.. சட்டென தனுஷ் சொன்ன பதில்! ஷாக்கான ரசிகர்கள்..

What Is Love Dhanush Answer Fans Shock : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கும் தனுஷ், தற்போது இந்தியில் ‘தேரே இஷ்க் மெயின்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ப்ரமோஷன் விழாவில் நடிகர்கள் கலந்து கொண்டபோது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதிலளித்தனர். அப்போது, தனுஷிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் கொடுத்த பதிலும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

Add Zee News as a Preferred Source

ட்ரைலர் வெளியீடு:

பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய்-ன் இயக்கத்தில் உருவாகும் 'தேரே இஷ்க் மே' படத்தின்  டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பரர்க்கப்பட்ட காதல் கதையான 'தேரே இஷ்க் மே' ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது. இது தொடர்பான ப்ரமோஷனில்தான், தனுஷ், கிருத்தி சனோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காதல் குறித்த கேள்வி:

ரசிகர்கள் மத்தியில் நடந்த ப்ரமாேஷன் விழாவில், நடிகர் தனுஷிடம் “உங்களை பொருத்தவரை காதல் என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு சிறிது நேரம் யோசித்து பதிலளிக்க வந்த தனுஷ், “எனக்கு தெரியவில்லை..” என்று கூறினார். பின்னர் அனைவரும் பதிலளித்தே ஆக வேண்டும் என்று கூறினர். பின்பு, “அதுவும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுள் (Overrated Emotion) ஒன்று என்று நினைக்கிறேன்” என்றார். இந்த பதிலை எதிர்பாராத ரசிகர்கள் இதை கேட்டவுடன் ஷாக் ஆகினர். பின்பு, அனைவரும் கத்தி ஆரவாரம் செய்தனர். வீடியோவில் சிலர் அவர் பதிலுக்கு பாராட்டு தெரிவிக்கும் ஆடியோவும் இடம் பெற்றிருக்கிறது. ‘தேரே இஷ்க் மெயின்’ ஒரு காதல் படம் என்பதால், இப்படிப்பட்ட கேள்வியை ரசிகர் கேட்க, அதற்கு தனுஷ் தகுந்த பதிலை கொடுத்திருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

தனுஷின் அடுத்த படம் என்ன?

தனுஷ், இந்த படத்தை முடித்து விட்டு அடுத்ததாக ஒரு தமிழ் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக கூறப்படுகிறது. பெரிய கதையான இதை முடிக்க ஒன்றரை வருடங்கள் தேவைப்படலாம் என மாரி செல்வராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேரே இஷ்க் மெயின் படம் சொல்வது என்ன?

'தேரே இஷ்க் மே' இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 28 அன்று வெளியாக உள்ளது. இது ஒரு காதல் காவியமான படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. டீஸர் மற்றும் மனதை வருடும் இசையின் வலுவான வரவேற்புக்கு பிறகு, 'தேரே இஷ்க் மே' படத்தின் இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டனர். தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில், இந்த டிரெய்லர் சங்கர் மற்றும் முக்தியின் யதார்த்தமான, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் கணிக்க முடியாத உலகத்திற்குள் ஆழமாக அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இது காரணம், காலம் மற்றும் விதியை மீறிய ஒரு காதல் கதையாக இருக்குமாம்.

இந்த புதிய காட்சிகள், காதல், இழப்பு மற்றும் அதிலிருந்து மீள்வது போன்ற படத்தின் முக்கிய கருப்பொருள்களை பற்றிய ஒரு அழுத்தமான பார்வையை வழங்குகின்றன. டீஸர் மற்றும் பாடல்கள் சுட்டிக்காட்டியதை விட இருண்ட, மேலும் ஆழமான கதைக்களத்தை இது வெளிப்படுத்துகிறது. ஆனந்த் L ராயின் தனித்துவமான கதைசொல்லும் பாணி, ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ்  யாதவின் எழுத்தின் உணர்ச்சிப்பூர்வமான ஆழத்துடன் இணைந்து, ஒரு சக்திவாய்ந்த சினிமா பயணத்திற்கு களம் அமைக்கிறது.

இந்த உலகின் இதயத்தில் AR ரஹ்மானின் இசை உள்ளது. இது ஏற்கனவே ரசிகர்களிடையே ஒரு உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, படத்தின் வெளியீட்டிற்கான மேடையை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | தனுஷுக்கு முதன் முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை! இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு..

மேலும் படிக்க | ஒரு Flop படம் கூட கொடுக்காத தமிழ் ஹீரோ! எல்லாமே 100 கோடி வசூல்..ரஜினி, கமல் இல்லை..

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News