)
Nivetha Pethuraj Rajhith Ibran Wedding : 2025ஆம் ஆண்டில் மட்டும், பல தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது திருமண அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். இவர், ரசிகர்களுக்கு தன்னுடைய காதலை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் அறிமுகமானார். மதுரை பெண்ணான நிவேதா, துபாயில் 10 வருடங்கள் வாழ்ந்த பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து நடிக்க ஆரம்பித்தார். நடிப்பைத்தாண்டி இவருக்கு கார் மற்றும் பைக் ரேசிங்கில் ஆர்வம் அதிகம். அப்படிப்பட்ட சில போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் டிக் டிக் இட்க், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. தெலுங்கிலும் இவருக்கு நிறைய ஆடியன்ஸ் இருக்கின்றனர்.
நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டார். அதில் அவருடன் இருந்த நபர், அவரை முன்னிருந்து இடுப்பில் கட்டிக்கொண்டிருந்தார். கேப்ஷனில் காதலை குறிக்கும் இமோஜிக்களை குறிப்பிட்டிருந்தார். இதனால் போட்டோவில் அவருடன் இருக்கும் அந்த நபர், அவரது காதலர் என்று தெரிந்து கொண்டனர். அவரது பெயர் ரஹ்ஜித் இப்ரான். இவர், துபாயை சேர்ந்த பெரிய தொழிலதிபர் மற்றும் மாடல் என்று கூறப்படுகிறது. காதலை மட்டும் அறிவித்த அவர், அதன் பிறகு வேறு எந்த பதிவையும் வெளியிடவில்லை.
நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார். அப்போது, தங்களது காதல் அறிவிப்பு இவ்வளவு பேரின் கவனத்தை ஈர்க்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதே போல, தனது காதல் கதை குறித்து பேசிய போது, இருவரும் ஒரு ரேஸ் ட்ராக்கில் 5 வருடத்திற்கு முன்னர் சந்தித்து கொண்டதாக கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் வெறும் நண்பர்களாக மட்டும் இருந்ததாகவும், பின்னர் காதலிக்க தொடங்கியதாகவும் கூறியிருக்கிரார்.
தங்களின் காதல் உறவு குறித்து வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று கூறியிருக்கும் அவர், தனது மேனேஜருக்கே இது ஷாக் கொடுத்த விஷயம் என்று தெரிவித்து இருக்கிறார்.
திருமணம் எப்போது?
நிவேதா பெத்துராஜ், தனது திருமண ஏற்பாடுகளுக்கான வேலைகளை தொடங்கியிருக்கிறாராம். வரும் அக்டோபர் மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, பின்பு 2026 ஜனவரி மாதத்தில் திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறார். திருமண தேதி மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ