)
Actor Srikanth: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பன், ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். ஒரு கட்டத்தில் அதிகமான படங்களில் நடித்திருந்த இவர் தற்போது படங்கள் இல்லாமல் பீல் அவர் ஆன நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீகாந்த் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்பு மருத்துவ பரிசோதனை செய்து அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வரும் ஜூலை 7ம் தேதி வரை ஸ்ரீகாந்தை முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகை ஸ்ரீகாந்தின் மனைவி யார்?
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கேரளாவை சேர்ந்த இயக்குனர் ஒருவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். சினிமா துறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இது போன்ற சர்ச்சையில் சீக்குவது ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு வரும் ஸ்ரீகாந்த் ஏற்கனவே தனது மனைவியால் சட்டப் போராட்டத்திற்கு ஆளாகியுள்ளார்.
நடிகை ஸ்ரீகாந்த் வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கும் சென்னையை சேர்ந்த வந்தனாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து மூன்று மாதங்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் வந்தனாவின் குடும்பத்தின் மீது ஏகப்பட்ட மோசடி புகார்கள் இருப்பது ஸ்ரீகாந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வந்தனாவை பார்க்கச் செல்வதை நிறுத்தி உள்ளார் ஸ்ரீகாந்த்.

இதனால் கோபமடைந்த வந்தனா, ஸ்ரீகாந்த் வீட்டிற்கே சென்று தர்ணா செய்தார். நாங்கள் இருவரும் ஏற்கனவே கணவன் மனைவி என்றும், நான் ஸ்ரீகாந்த் உடன் தான் வாழ்வேன் என்று சட்ட போராட்டம் நடத்தினார். கிட்டத்தட்ட ஒரு வருடம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில் வந்தனாவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. பிறகு இரு வீட்டாரும் சமரசம் பேசி ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனாவை மீண்டும் சேர்த்து வைத்தனர். இவர்களுக்கு அனைவரும் முன்னிலையில் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஸ்ரீகாந்த் படங்களில் நடிகராக நடித்து வந்த நிலையில், மறுபுறம் வந்தனா பல தொழில்களில் ஈடுபட்டு வந்தார். சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருபவர் வந்தனா. தற்போது நீதிமன்ற காவலில் நடிகர் ஸ்ரீகாந்த் இருக்கும் நிலையில், போதை பொருள் எங்கிருந்து வந்தது? எத்தனை நாட்களாக பயன்படுத்தி வருகிறீர்கள்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதற்குப் பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ