)
Who Is Actress Kamini Kaushal : பாலிவுட்டின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவராக இருப்பவர், காமினி கௌசல். லெஜண்ட் நடிகை என போற்றப்படும் இவர், தனது 98வது வயதில் இறந்திருக்கிறார்.
காமினி கெளசல்:
இந்தி சினிமா ரசிகர்கள் மத்தியில், அதிகம் மதிக்கப்படும் நடிகையாக இருந்தவர் காமினி கௌசல். 1927ஆம் ஆண்டு பிறந்த இவர், 1946ஆம் ஆண்டில் நீச்சா நகர் எனும் படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். நடிப்பதற்காக கேமராவிற்கு முன் இருந்தாலும், பிற சமயங்களில் ப்ரைவ்சியை எதிர்பார்ப்பவராக இருப்பாராம். தன் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற இவர், பல முக்கிய நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
98 வயதில் மரணம்!
மும்பையில் தங்கியிருந்த காமினிக்கு, 1948ல் சூட் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 98 வயதான இவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த சமயத்தில் துயரத்தில் இருக்கும் தங்களின் குடும்பத்தின் தனியுரிமைக்கு (Privacy) மரியாதை கொடுக்குமாறும் அவர்கள் ஊடகத்திடம் பேசி வருகின்றனர்.
சகோதரியின் கணவரை திருமணம் செய்தவர்..
காமினி கெளஷல், தனது சகோதரியின் உயிரிழப்பிற்கு பின்னர், அவரது கணவரையே திருமணம் செய்து கொண்டவர் என கூறப்படுகிறது. அவரது சகோதரிக்கு 2 பெண் குழந்தைகள் இருந்ததாம். அவர், ஒரு சாலை விபத்தில் இறந்திருக்கிறார். இதையடுத்து, அந்த இரண்டு பெண் குழந்தைகளுக்காக அக்காவின் கணவரையே அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
திலீப் குமாருடன் காதல்..
பாலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக இருந்தவர், திலீப்குமார். இவரும் காமினியும் மூன்று படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் திலீப் காமினியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதால் இதற்கு காமினி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
பிளாக் அண்ட் வொயிட் கதாநாயகி!
பல கருப்பு வெள்ளை படங்களில் கதாநாயகியாக வந்துள்ள இவர், திலீப் குமார், ராஜ்குமாருடன் பெரும்பாலான படங்களில் சேர்ந்து நடித்துள்ளாராம். கைதேர்ந்த நடிகை என்கிற பட்டத்தை வெகு சில படங்களிலேயே பெற்ற இவர், எத்தனை பெயர் மற்றும் புகழ் வந்தாலும் அதனை தன் தலைக்கு எடுத்து சென்றதே இல்லையாம்.
கடைசியாக நடித்த படம்:
நடிகை காமினி, தனக்கு வயதான பிறகு திரையுலகில் இருந்து விலகிய இவர் கடைசியாக 2022ல் வெளியான லால் சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னர், 2019ல் கபீர் சிங் படத்தில் ஹீரோவுக்கு பாட்டியாக நடித்திருந்தார். இந்த ரோலுக்காக அவருக்கு பலர் மத்தியில் பலத்த பாராட்டுகள் கிடைத்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ