)
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் கூலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. லோகேஷ் கனகராஜ் இடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். படத்தில் உள்ள ஒரு காட்சி கூட புதிதாக இல்லை என்றும், ஏற்கனவே பார்த்த பழைய படத்தின் பீல் தான் வருகிறது என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புலம்பி வந்தனர். மேலும் கூலி படம் தொடர்பாக மீம்ஸ்களும், ட்ரால்களும் வைரலாகி வந்தது. 1000 கோடி வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த கூலி படத்தின் தோல்வியால் திரையுலகமே அதிர்ச்சியில் இருந்தது.

கூலி படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்க இருந்தார். அதற்கு முன்பு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவும் திட்டமிட்டு இருந்தார். தற்போது கூலி படத்தின் தோல்வியால் இந்த இரண்டு ப்ராஜெக்ட்களும் தள்ளிப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமலை வைத்து விக்ரம் என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து இயக்கிய கூலி படம் தோல்வி அடைந்தது நிலையில் அடுத்ததாக ரஜினி மற்றும் கமல் இருவரையும் வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியானது.
நீண்ட ஆண்டுகளாக ரஜினி மற்றும் கமல் இணைந்து எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இருவரும் நண்பர்களாக ஒரே மேடையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் இருவரும் ஒரு படத்தில் ஒன்றாக நடிக்கவில்லை. இதே போல நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் தக் லைப் என்ற படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அந்த படமும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினாலும், இந்த படத்தை யார் இயக்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தை இயக்குவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருந்தாலும் கூலி படத்தின் தோல்வியால் அது நடக்குமா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. ரஜினி மற்றும் கமல் ஒரே படத்தில் இணைந்தால் அந்த படத்தின் பட்ஜெட்டும் மிகப்பெரிய அளவில் உயரும். அதனை சமாளிக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் இல்லை என்றும் ஒருபுறம் பேசப்படுகிறது. இவ்வளவு பெரிய ப்ராஜெக்டை சரியான திட்டமிடலுடன் முடிப்பதும் மிகப் பெரிய கடினமானது. இதனால் இந்த படம் யாரிடம் செல்லும் என்பதும் மர்மமாகவே உள்ளது.
கமல்ஹாசன் அடுத்தபடியாக அன்பறிவு இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்தார். ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார். இவ்வளவு நாள் வதந்திகளாக மட்டுமே இருந்த ரஜினி மற்றும் கமல் இணையும் படம் தற்போது உறுதியாகி உள்ள நிலையில், விரைவில் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ