)
Who Is Rishab Shetty Wife Pragathi : இந்திய அளவில், பலரை திரும்பி பார்க்க வைத்த படமாக இருக்கிறது, காந்தாரா சாப்டர் 1. இந்த படத்தின் முதல் பாகம், 2022ஆம் ஆண்டு ஹிட் ஆனது. அந்த படமும், சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி குறித்தும், அவர் குறித்த விஷயங்களையும் ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் தேடி வருகின்றனர்.
ரிஷப் ஷெட்டியின் மனைவி!
ரிஷப் ஷெட்டியின் மனைவியின் பெயர், பிரகத்தி ஷெட்டி. இவர், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். தரவுகளின் படி, பிரகத்தி சிவமூகா எனும் இடத்தில் உள்ள ஷயாத்ரி எனும் கல்லூரியின் இன்ஜினியரிங் படித்திருக்கிறார். அதன் பிறகு, பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஐடி ஊழியராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஐடி வேலையிலேயே இருந்த இவருக்கு, சினிமா மீதும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. பின்னர், விதியே அவரை சினிமாவிற்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது.
ரிஷப் ஷெட்டியுடன் காதல்!
ரிஷப் ஷெட்டி-பிரகத்தியின் கதையே, சினிமாவில் வரும் காதல் கதை போலத்தான். ரிஷப் ஷெட்டி, தனது நெருங்கிய நண்பர் ரக்ஷித் ஷெட்டியுடன் சேர்ந்து ஒரு படத்தில்னடித்திருக்கிறார். அப்படம், 2014ல் வெளியாகியிருக்கிறது. ரக்ஷித் ஷெட்டியின் பெரிய ரசிகையான பிரகத்தி தனது தோழிகளுடன் அப்படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அங்கு தியேட்டர் ஸ்கிரீனிங்கிற்கு ரிஷப் ஷெட்டி வந்திருக்கிறார். அப்போது பட ஹீரோயினுடன் அனைவரும் போட்டோ எடுக்க ஆசைப்பட்டிருக்கின்றனர். பிரகத்தி மட்டும் ரிஷப் ஷெட்டியிடம் போட்டோ கேட்டிருக்கின்றனர்.
அதன் பிறகு இருவரும் முகநூலில் பேச ஆரம்பித்து காதலை வளர்த்துள்ளனர். இதற்கு 10 மாதங்களுக்குள் இருவரும் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இருவரின் குடும்பத்தினரும் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டதால், அனைத்தும் சுமூகமாக நடந்து முடிந்திருக்கிறது.
இருவரும் சேர்ந்து வேலை பார்த்த படம்!
பிரகத்தி, தனது கணவர் ரிஷப் ஷெட்டியுடன் சேர்ந்து பெல் பாட்டம், காந்தாரா, காந்தாரா சாப்டர் 1 உள்ளிட்ட பல படங்களில் சேர்ந்து வேலை பார்த்திருக்கிறார். இருவரும் சேர்ந்து திரைக்கதை எழுதுவது, நடிப்பது, இயக்குவது போன்ற விஷயங்களை செய்வார்களாம். இவர்தான், காந்தாரா படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்திருக்கிறார்.
காந்தாரா படம் குறித்து பலரும் பேசுவதற்கு முக்கிய காரணம், அப்படத்தில் இடம் பெற்றிருந்த ஆடைகளும் முக்கிய காரணம். எனவே, அந்த படத்தின் வெற்றிக்கு இவரும் பெரிய காரணம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
காந்தாரா சூப்பர் ஹிட்!
காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், இந்திய அளவில் பெரிய ஹிட் அடித்துள்ளது. இது, 2022ல் வெளியான காந்தாரா படத்தின் முன்கதையாக இருக்கிறது. இதில் ரிஷப் ஷெட்டி வீரனாக நடித்துள்ளார். ருக்மிணி வசந்த், கனகவதி என்கிற ராணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம், அக்டோபர் 2ஆம் தேதி வெளியானது. இப்போது வரை படம் ரூ.379 கோடி வசூலை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கிளை கதைகளையும் ரிஷப் ஷெட்டியிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ