தி ரியல் பைசன்! யார் இந்த மணத்தி கணேசன்? இவரைப்பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

Who Is Manathi Ganesan Bison Movie : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், பைசன். இந்த படம், மணத்தி கணேசன் என்பவரின் கதையை வைத்து எடுக்கப்பட்டதாகும். இவர் குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Oct 17, 2025, 07:18 PM IST
  • ரியல் பைசன் - மணத்தி கணேசன்!
  • யார் இந்த கபடி வீரர்?
  • இதோ முழு விவரம்!
தி ரியல் பைசன்! யார் இந்த மணத்தி கணேசன்? இவரைப்பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

Who Is Manathi Ganesan Bison Movie : தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 17ஆம் தேதியான இன்று, ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகி உள்ளது. அதில் முக்கியமான படமாக இருக்கிறது பைசன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். இதில், கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்க்கைதான் படமாக்கப்பட்டுள்ளது. இவர் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

ரியல் பைசன்! 

பைசன் திரைப்படம், உண்மை கதைகளை வைத்து எடுக்கப்பட்ட படமாக இருக்கிறது. இதில் இருக்கும் கதாபாத்திரங்களின் கதையும் உண்மை கதை என்று சொல்லப்படுகிறது. அதிலும் முக்கியமாக ஹீரோ கதாபாத்திரம், அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இவரை மனதில் வைத்து தான் துருவ் விக்ரமின் 'மனத்தி கிட்டன்' என்கிற கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பைசன் படத்துக்காக துருவ்விற்கு கபடி பயிற்சி கொடுத்ததும் இவர்தான். இவரை தென் தமிழகத்தில் ரியல் பாய்சனாகவே பார்க்கின்றனர். 

யார் இந்த மணத்தி கணேசன்?

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மனத்தி என்கிற கிராமத்தில் பிறந்தவர் தான், பி.கணேசன். பள்ளியில் பயின்றபோது ஹாக்கி விளையாட்டின் மீது அதிக நாட்டம் கொண்ட இவர்,  தனது ஆசிரியர் மூலமாக கபடியில் ஆர்வம் இருப்பதை கண்டு கொள்கிறார். அதன் பிறகு 1980-களில் கபடி விளையாட ஆரம்பித்த இவர், தென் மாவட்டங்களில் இருந்த உள்ளூர் விளையாட்டு வீரர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தனது கிராமத்திலேயே பயிற்சிகளை மேற்கொண்டார். 

கணேசன் கபடி களத்திற்கு ரைட் சென்றால் அவரை யாராலும் பிடிக்க முடியாது என்கிற பேச்சு இவர் விளையாடும் காலத்தில் இருந்திருக்கிறது. தடுப்பாட்டம் மேற்கொள்ளும் போது, தன்னைவிட எவ்வளவு பெரிய வீரர்கள் வந்தாலும் அவர்களை தன் தலையால் முட்டி வெளியே தூக்கி வீசி விடுவாராம். இப்படி கூறப்பட்டு, அவரது பெயர் பல ஊர்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் விளையாட்டை பார்ப்பதற்காகவே பக்கத்து ஊரிலிருந்து டிராக்டர் கட்டிக்கொண்டு வருவார்களாம். 

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், தனது கபடி விளையாட்டின் மூலம் பிரபலமான மணத்தி கணேசன், பைசன் என்கிற பெயரையும் தனது கபடி விளையாடும் ஸ்டைலுக்காக பெருகிறார்.

வேலையும் கபடியும்!

பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, கபடியில் மிக பிரபலமான அணியான சிவந்தி ஆந்தித்தனாரின் சன் பேப்பர் மில் நிறுவனத்தின் கபடி அணிக்கு தேர்வாகிறார். பின்னர், சென்னை ஐசிஎஃப் தமிழ்நாடு போலீஸ் அணிகளுக்கு எதிராக களமிறங்கி, சிறந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்துகிறார். 

தேசிய அளவிற்கு விளையாடக்கூடிய தகுதி உள்ள கபடி வீரர் என்கிற பெயரை பெருகிறார், மணத்தி கணேசன். பின்னர், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு இட ஒதுக்கீடு மூலமாக தமிழ்நாடு மின்வாரியத்தில் இவருக்கு கடைநிலை ஊழியர் பணி கிடைக்கிறது. வேலையில் சேர்ந்த பின்பு, கபடியில் முழு கவனம் செலுத்துகிறார். இதைத்தொடர்ந்து, இந்திய அணியில் இடம் பெற்று ஆசிய கோப்பையை வென்ற இவருக்கு இவருக்கு, 1995ஆம் ஆண்டு அர்ஜுனா விருது கிடைக்கிறது. இதன் பிறகு, இவருக்கு பதவி உயர்வும் கிடைக்கிறது.

இப்போது என்ன செய்கிறார்?

மணத்தி கணேசன், தற்போது தமிழ்நாடு விளையாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார். கபடி வீரர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். பைசன் படத்தை பார்த்துவிட்டு ஊடகத்தினரிடம் பேசிய இவர், “Asian Games வெற்றி பெற்றபோது எந்தளவு மகிழ்ச்சியாக இருந்தேனோ, அதைவிட அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒன்றை மாரி செல்வராஜ் செய்திருக்கிறார்”  என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க | பைசன் படத்திற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - மாரி செல்வராஜ்!

மேலும் படிக்க | பைசன் Vs டீசல் Vs ட்யூட் : 3-ல் எந்த படம் நல்லாயிருக்கு? தீபாவளி வின்னர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News