Who Is Shruthi Narayanan : கடந்த சில நாட்களாகவே இணையத்தில் அதிகமானோர் தேடி வரும் பெயர் ஸ்ருதி நாராயணன். காரணம், ஒரே ஒரு லீக் வீடியாே. இவர் யார்? இவர் நடித்த சீரயில் எது? போன்ற விவரங்களை இங்கு பார்ப்போம்.
ஸ்ருதி நாராயணன்:
தமிழ் சின்னத்திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் ஸ்ருதி நாராயணன். இவர், விஜய் டிவியின் பிரபலமான சீரியலான ‘சிறகடிக்க ஆசை’ எனும் தொடரில் துணை கதாப்பாத்திரமாக இருக்கிறார். பல ஆயிரம் ரசிகர்களை கொண்ட இந்த சீரியலில், இவர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் ஓரளவிற்கு பிரபலமான இவர், திரையுலகில் நடிக்கவும் முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
லீக்கான வீடியோ!
ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று, கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ காலில், ஒருவர் “இதை செய்ங்க, அதை செய்ங்க..” என்று கூற, இவர் அதை அப்படியே செய்வது அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதனை ஒரு சிலர் Deep Fake, AI Video என்று கூற, இன்னும் சிலர் அது உண்மையான வீடியோதான் என்று கூறி வருகின்றனர்.
மொத்தம் 14 நிமிடங்கள் 5 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் வீடியோ காலின் மறு பக்கத்தில் பேசும் நபர் யார் என்பதே தெரியவில்லை. ஆனால் இப்போது வைரலாவது என்னவோ, இந்த பெண்ணின் முகம்தான்.
திரைத்துறைக்கு வந்தது எப்படி?
ஸ்ருதி நாராயணனுக்கு, சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் பள்ளியில் படித்தவர். இவருக்க்கு பள்ளியில் படிக்கும் போதிருந்தே நடிப்பின் மீது பேரார்வம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 12ஆம் வகுப்பு படிக்கும் போதே நடிகையாக வேண்டுமென தீர்மானித்து விட்டாராம்.
கல்லூரியில் படித்து கொண்டிருந்த சமயத்தில் ஸ்ருதிக்கு சில யூடியூப் சேனல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்ட அவர், 2021ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஒரு பிரபல தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி தயாரிப்பு உதவியாளராக பணியில் இருந்திருக்கிறார். இதையடுத்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஸ்ருதிக்கு, சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமந்தாவின் வெப் தொடரில்..
நடிகை ஸ்ருதி, தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமல்ல, சமந்தாவின் சிட்டடெல் வெப் தொடரிலும் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் அவரது பெயர் பெரிதாக தெரியவில்லை.
லீக் வீடியோ குறித்த அவர் பேசியது..
தன்னை பற்றிய அந்தரங்க வீடியோ, வைரலானதை தொடர்ந்து அவர் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், இது போல நீங்கள் என்னை பற்றி விஷயங்களையும் வீடியோக்களையும் பரப்புவது, எனக்கும் என்னை சேர்ந்தவர்களுக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறது. மேலும், ஒருவரின் அனுமதியின்றி இது போன்ற வீடியோக்களை பரப்புவதற்கு சட்டத்தில் என்னென்ன தண்டனைகள் இருக்கிறது என்பதையும் அவர், வெளியிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | ஓவியா to த்ரிஷா..வீடியோ லீக் சர்ச்சையில் சிக்கிய தமிழ் நாயகிகள்! லிஸ்ட் பெருசு..
மேலும் படிக்க | உங்கள் அக்கா, தங்கை வீடியோவை பாருங்கள்: ஸ்ருதி நாராயணன் காட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









