Why Bhavana Did Not Act In Tamil Movies : பொதுவாகவே கோலிவுட்டில் தமிழ் பேசும் தமிழ் நடிகைகளை விட, தமிழ் பேசும் மலையாள நடிகைகள் பலர் இருப்பர் என்பது அனைவருக்கும் தெரியும். இளம் வயதிலேயே, கோலிவுட்டில் நடிக்க வரும் இவர்கள், சில படங்களில் ஹீரோயின்களாக நடித்து ரசிகர்களின் மனங்களை கொய்து விட்டு பின்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம்-குட்டி என செட்டில் ஆகி விடுவர். அப்படி, சில படங்களிலேயே நடித்திருந்தாலும் ரசிரக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பவர், பாவனா. இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தான் ஏன் தமிழ் படங்களில் நடிப்பதே இல்லை என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.
பாவனா நடித்த படங்கள்:
2002ஆம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்த பாவனா, ஆரம்ப காலங்களில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மலையாள படங்கள்தான். 2006ஆம் ஆண்டு வெளியான ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு தொடர்ந்து 4 தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், இவையாவும் பெரிதாக வெற்றி பெறாததால் மீண்டும் மலையாள திரையுலகிற்கு நடிக்க சென்றார். அதன் பிறகுதான் இவருக்கு பெரிய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வெயில், தீபாவளி உள்ளிட்டவை இவர் நடிப்பில் வெளியான மறக்க முடியாத திரை படங்களாகும். ஜெயம் கொண்டான் படத்தில் நடித்த பிறகு, அவர் எந்த தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இப்படியே கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஓடிவிட்டது.
ஏன் நடிக்கவில்லை?
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் பாவனா, கடந்த 16 வருடங்களில் தன் படத்தில் வந்து நடிக்குமாறு பல இயக்குநர்களிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக கூறியிருக்கிறார். அப்போது படக்குழுவினருக்கும் தனக்கும் சரியான தொடர்பு இல்லாததால் (miscommunication) அந்த பட வாய்ப்புகள் கை நழுவி போனதாக கூறியிருக்கிறார். ஒரு சில முறை தன்னிடம் வந்த படங்களின் கதை செட் ஆகாததால் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
இப்போது ரீ-எண்ட்ரி!
பாவனா, தற்போது பல வருடங்கள் கழித்து தமிழ் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பெயர் தி டோர். ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அவர் மெயின் கேரக்டராக நடித்திருக்கிறார். இவரை, மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
5 வருட பிரேக்!
நடிகை பாவனா, 2017ஆம் ஆண்டு திருசூரில் இருந்து கொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் போது அவரை சிலர் கடத்தி பாலியல் வன்புனர்வு செய்ததாக புகார் செய்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், மலையாள திரையுலகில் இருந்து 5 வருடங்கள் பிரேக் எடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைகளும் நடந்தது. ஆனால், கடைசி வரை இதில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதிலிருந்து மீண்டு வந்த பாவனா, இப்போதும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி’ சர்ச்சையின் போது, இவரது பெயர் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது.
மேலும் படிக்க | தன்னை விட 18 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் தனுஷ்! யார் தெரியுமா?
மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமை..தொடர் தோல்வி..எல்லாம் கடந்தும் அக்னி சிறகாக பறக்கும் பாவனா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









