ஊரே பேசும் Adolescence Netflix தொடர்! அப்படி இதில் என்ன இருக்கு?

Why Adolescence Netflix Series Is Famous : இந்தியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் Adolescence வெப் தொடர்! அப்படி இதில் என்ன இருக்கு?  

Written by - Yuvashree | Last Updated : Apr 4, 2025, 06:50 PM IST
  • ஊரே பேசும் Adolescence நெட்ஃப்ளிக்ஸ் தொடர்!
  • ஏன் இவ்வளவு பிரபலம்?
  • இதுதான் காரணம்..
ஊரே பேசும் Adolescence Netflix தொடர்! அப்படி இதில் என்ன இருக்கு?

Why Adolescence Netflix Series Is Famous : கடந்த சில நாட்களாக இந்தியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கும் வெப் தொடர், Adolescence. இந்த தொடர் இவ்வளவு பிரபலமாக என்ன காரணம்? இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

இந்தியர்களால் இந்தியாவில் எடுக்கப்படும் தொடர்களை விட, வெளிநாட்டில் நிகழும் வேறு கதை கொண்ட தொடர்கள் அல்லது படங்கள் நம் ஊரில் பிரபலமாவது வழக்கம். அதிலும், அமெரிக்கா,  இங்கிலாந்து, கொரியா உள்ளிட்ட படங்கள் மற்றும் தொடர்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகம். அப்படி சமீபத்தில் அனைவராலும் பேசப்படும் ஒரு தொடர்தான், Adolescence. அனைவரும் இதுகுறித்து பேசும் அளவிற்கு அப்படி இந்த தொடரில் என்ன இருக்கிறது? இது குறித்த முழுவிவரத்தை இங்கு பார்ப்போம். 

Adolescence வெப் தொடர்:

கடந்த மார்ச் 13ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான வெப் தொடர் இது. Adolescence என்ற இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம், இளமைப் பருவம் என்பதாகும். அதாவது குழந்தை பருவத்திற்கும் வயது வந்த நிலைக்கு இடைப்பட்ட இந்த வயதை தான் Adolescence இன்று ஆங்கிலத்தில் கூறுவர். அப்படிப்பட்ட வயதில் இருக்கும் ஒரு சிறுவன் செய்த விஷயத்தால், அவன் வாழும் ஊரே அதிர்ந்து போகிறது. அவன் செய்த அந்த செயல் சமூகத்தின் அபாய ஒலியாகவும் இருக்கிறது. அப்படியே அவன் என்ன செய்தான்? முழு விவரம் இதோ. 

கதை என்ன?

பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுவன், Jamie Miller திடீரென ஒரு நாள் காலை போலீஸாரால் கைது செய்யப்படுகிறான். அவனது தாய்-தந்தை, சகோதரி என யாருக்குமே அவன் என்ன தவறு செய்தான் என்பது தெரியவில்லை. விசாரணை நடத்தும் போலீசார், “உங்கள் மகன் அவனுடன் பள்ளியில் படிக்கும் சிறுமியை 7 முறை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறான்” எனும் தகவலை தெரிவிக்கின்றனர். அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் காண்பிக்கின்றனர்.

கொலை செய்யும் அளவிற்கு தனது மகன் எப்படி மாறினான் என்பது தெரியாமல் அவர்களது பெற்றோர் முழிக்கின்றனர். Jamie ஒரு சாதாரண சிறுவன். வரலாறு படிக்க பிடித்த இவன், தனது வகுப்பில் நன்கு படிக்கும் மாணவனாகவும் விளங்குகிறான். இவனுக்குள் ஒரு பெண்ணை ஏழு முறை கத்தியால் குத்தி தாக்கும் அளவிற்கு வெறுப்புணர்வு ஏற்பட்டது ஏன்? எனும் கேள்வி உடன்தான் இந்த வெப் தொடரின் முதல் எபிசோட் ஆரம்பிக்கிறது.

டீன் ஏஜ் குழந்தைகளும்-சமூக வலைத்தளமும்: 

டீன்- ஏஜ்ஜில் இருப்பவர்கள், சமூக வலைதளத்தை எப்படி எல்லாம் உபயோகிக்கின்றனர் என்பதையும், ஒரு சிம்பிளான ஹார்டின் இமோஜிக்குள் என்னென்ன மாதிரியான உள் அர்த்தங்கள் இருக்கின்றன என்பதையும் இந்த தொடரில் விளக்குகின்றனர். உதாரணத்திற்கு, சிகப்பு நிற ஹார்ட் இமோஜி என்றால்-காதல், பர்ப்பில் நிற ஹார்ட் இமோஜி என்றால் காமம் என இவர்கள் Code word-ல் பேசிக்கொள்வது, என்பது போன்ற பல விஷயங்கள் இந்த சீரிசில் தோலுரித்து காண்பிக்கப்பட்டுள்ளது.

பெண் வெறுப்பு: 

பெண் வெறுப்பு என்பது நாம், தினசரி இயல்பு வாழ்க்கையில் பார்க்கும் பிரச்சினையாகும். பெண்கள் மீது கொண்ட இந்த வெறுப்பினால் தான், சில ஆண்கள் பெண்களை கொலை செய்வது வரை செல்கின்றனர். இந்த எண்ணம், எப்படி ஒரு சிறுவனின் மனதை ஆட்கொள்கிறது என்பதையும், இந்த படத்தில் காண்பித்து இருக்கின்றனர்.

சிங்கிள் ஷாட்:

இந்த தொடரின் அனைத்து எபிசோடுகளும், சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இடையில் கட் எதுவும் செய்யப்படாமல், கேமரா ஆரம்பித்தது முதல் முடியும் வரை எங்குமே கட் கிடையாது. இதை பார்க்கும் போது, நாமும் அந்த கேரக்டருடன் சேர்ந்து அந்த தொடரில் பயணிப்பது போல உள்ளது. இதனால், அந்த கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் என்னென்ன உணர்ச்சிகளை எதிர்கொள்கின்றனரோ, அதனை நாமும் உணர்கிறோம்.

மேலும் படிக்க | ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர்-திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!

மேலும் படிக்க | த்ரிஷாவின் முதல் வெப் தொடர் ‘பிருந்தா’ ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News