தக் லைஃப் படத்தில் பாடல்கள் வெட்டப்பட்டது ஏன்? மணிரத்னம் சொன்ன பதில்!

Why Thug Life Songs Were Trimmed In Film : மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், தக் லைஃப். இந்த படத்தில், 10 பாடல்கள் உள்ளன. ஆனால், அத்தனை பாடல்களும் ட்ரிம் செய்யப்பட்டிருக்கின்றன. அது ஏன் என்று மணி விளக்கம் கொடுத்துள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 7, 2025, 01:42 PM IST
  • அப்செட்டான ரசிகர்கள்
  • தக் லைஃப் படத்தில் இடம் பெறாத பாடல்கள்
  • இதற்கு காரணம் என்ன?
தக் லைஃப் படத்தில் பாடல்கள் வெட்டப்பட்டது ஏன்? மணிரத்னம் சொன்ன பதில்!

Why Thug Life Songs Were Trimmed In Film : கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளியான படம், தக் லைஃப். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், தியேட்டரில் நேரில் சென்று படம் பார்த்தவர்கள், பாடல்கள் கட் செய்யப்பட்டதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அது ஏன் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தக் லைஃப் திரைப்படம்:

2025ஆம் ஆண்டில், அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட படம், தக் லைஃப். இதன் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்த காரணம், மணி-கமலின் 38 வருடத்திற்கு பிறகான கூட்டணி என்பதுதான். இதைத்தாண்டி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, சிம்பு, த்ரிஷா, அபிராமி போன்ற நட்சத்திர பட்டாளம் போன்றவை காரணங்கள் ஆகும்.

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா பெரிய அளவில் நடந்தது. இதில் ரஹ்மான், சின்மயி, சாருலதா, பால் டப்பா உள்ளிட்ட பல பாடகர்கள் பாடினர். இதில் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

ப்ரமோஷனாக அமைந்த பாடல்கள்..

தக் லைஃப் படத்திற்கு அதன் பாடல்களே பெரிய ப்ரமோஷனாக அமைந்தன. குறிப்பாக, ‘முத்த மழை’ பாடலை தமிழில் ஒரிஜினலாக பாடியிருந்தது பாடகி தீதான். ஆனால், இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடியது, பலருக்கும் பிடித்து போனது. இதையடுத்து, சின்மயியை தமிழ் திரையுலகில் பாடுவதற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்று அனைவரும் கேட்க ஆரம்பித்தனர். மீண்டும் இவர் குரலில் தமிழில் பாடல்கள் வர வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக இருக்கிறது. 

தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடலின் 2 வர்ஷன்களோடு சேர்த்து, 10 பாடல்கள் உள்ளன. ஆனால், படத்தில் அதில் 1 பாடல் கூட முழுமையாக படத்தில் இடம் பெறவில்லை. சுகர் பேபி பாடலில் இருந்து, அனைத்து பாடல்களுமே ட்ரிம் செய்யப்பட்டதாக இருந்தன. இதனால், ரசிகர்கள் செம டென்ஷனாகி விட்டனர். இதையடுத்து, படத்தின் இயக்குநர் மணிரத்னமிடம் இப்படி பாடல்கள் ட்ரிம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்திருக்கிறார்.

மணிரத்னம் சொன்ன பதில்!

“முன்னர் ஒரு பாடலை கேட்க வேண்டும் என்றால், அதற்கு தியேட்டருக்கு போக வேண்டும் என்கிற நிலை இருந்தது. ஆனால், இப்போது பாடல்களை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வெவ்வேறு தளங்கள் வந்துவிட்டது. அதனால் சினிமாவிற்கு வருபவர்கள், பாடல் பார்க்க வரவில்லை, கதையை பார்க்க வருகிறார்கள். அதனால், இருக்கும் நேரத்திற்குள் அவர்களை படத்தில் பார்க்க வைக்க வேண்டும். இதனால் இருப்பதிலேயே நல்ல பாடலை கூட, படத்தில் வைக்க முடியாமல் போகலாம். அதை பின்னணி இசையாக உபயோகிக்கலாம். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் வைக்க முடியும்” என்று கூறியிருக்கிறார். இது, அவர் படத்தின் ரிலீஸிற்கு முன்னர் கொடுக்கப்பட்ட நேர்காணல் என்று கூறப்படுகிறது. எனவே, அவர் இதில் பொதுவாக பாடல்கள் ஏன் படத்தில் வெட்டப்படுகின்றன என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எதிர்பார்ப்புகள் ஏமாற்றமா? தக் லைஃப் படம் எப்படி? X தள விமர்சனம்!

மேலும் படிக்க | இன்று வெளியான தக் லைஃப்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News