)
Vetrimaran Latest News Updates: இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், அவரிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம்தான் 'Bad Girl'. இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் யூ-ட்யூப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.
இளம் வயது பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் கலாச்சாரத்தை எடுக்கும் வகையில் இருப்பதாக ஒரு சிலர் விமர்சித்து வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் இந்த நவீன காலகட்டத்தில் ஒரு இளம்பெண் மீது குடும்பமும், சமூகமும் கொடுக்கும் அழுத்தத்தையும் அதற்கு அந்த பெண்ணின் வெளிப்பாடு என்ன என்பதையே இத்திரைப்படம் காட்ட முற்படுகிறது என வாதிட்டு வருகின்றனர். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குநர், தயாரிப்பாளர் வெற்றிமாறன், "நான் முதலில் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். இயக்குனராக இருப்பது எளிது, தயாரிப்பாளராக இருப்பது கடினம்.
ஒரு திரைப்படம் உருவாக்க மிகவும் மோட்டிவேஷனல் ஆன ஆள் தேவை. ஆனால் வர்ஷா மிகவும் ஹைபர் மோட்டிவேஷனலானால் ஆன நபர். அவர் முதலில் நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களுக்கு படம் செய்ய தான் இருந்தது. ஆனால் ஒரு புரோடெக்ஷன் ஹவுஸ் இருந்தால் நல்ல இருக்கும் என நினைத்து நாங்கள் இந்த படத்திற்கு உள்ளே வந்தோம்.
தணிக்கை துறை படத்திற்கு U/A 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என்கிற சான்றிதழை பெற்றுள்ளோம். கிராஸ்ரூட் ஃபிலிம்ஸ் சார்பில் ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆண்ட்ரியா நடித்த 'மனுஷி' என்கிற திரைப்படம் பல்வேறு வழக்குகளை சந்தித்து உள்ளது. இரண்டு முறை தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தற்போது தான் அந்த படத்திற்கான பிரச்சினை ஓரளவுக்கு முடிந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. குறிப்பாக படத்தின் முன்னோட்டத்தை பார்த்துவிட்டு ஒரு சிலர் இந்த படத்தை பற்றிய கருத்துக்களுக்கு எதிராக இருந்தனர். என்னை போன்ற நபர்கள் தயாரிப்பாளராக இருப்பதும் மிகவும் கடினமான விஷயம். ஆகவே இந்த Bad Girl திரைப்படத்துடன் தயாரிப்பு பணியை நிறுத்திக் கொள்கிறேன். கிராஸ்ரூட் ஃபிலிம்ஸ் கடையை சாத்திக் கொள்கிறேன்" என அறிவித்தார்.
கடன் சுமை காரணமாகவே வெற்றிமாறன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மறைந்த பிரபல இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவியாளர்தான் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் பொல்லாதவன். தனுஷ் நடித்த இத்திரைப்படம் 2007இல் வெளியானது.
தொடர்ந்து ஆடுகளம் (2011), விசாரணை (2016), வடசென்னை (2018), அசுரன் (2019), விடுதலை 1 (2023), விடுதலை 2 (2024) உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்துள்ளார். சூர்யா நடிப்பில் இவர் இயக்க இருந்த வாடிவாசல் இன்னும் தொடக்கக் கட்டத்திலேயே இருக்கிறது. வாடிவாசல் திரைப்படம் குறித்து இன்னும் 10 நாள்களில் அறிவிப்பதாக இன்றைய செய்தியாளர் சந்திப்பிலேயே வெற்றிமாறன் தெரிவித்தார். அடுத்து சிம்பு உடன் புதிய படத்தில் இணைந்துள்ளதாக முன்னர் அறிவித்தார்.
இவர் கடந்த 2013ஆம் ஆண்டில், அதாவது ஆடுகளம் ரிலீஸான பின்னர் கிராஸ்ரூட் பிலிம் கம்பேனி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். உதயம் NH4 திரைப்படமே இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பொறியாளன், காக்கா முட்டை, விசாரணை, கொடி, அண்ணனுக்கு ஜே, வடசென்னை, மிக மிக அவசரம், சங்கத்தலைவன், விடுதலை 1, கருடன், விடுதலை 2 உள்ளிட்ட திரைப்படத்தை தயாரித்துள்ளன. ஒரு சில திரைப்படங்களை வெளியிட்டுள்ளனர். தற்போது Bad Girl திரைப்படம் வெளியாக உள்ளது. மனுஷி திரைப்படத்தின் வழக்கு நடைபெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ