Why Sachien Is Not Hit Like Ghilli Re Release : இணையம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே, விஜய்யின் சச்சின் திரைப்படத்தின் ரீ-ரிலீஸ்குறித்த பதிவுகள்தான் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் கடந்த ஆண்டு கில்லி படம் வெளியான போது அது செய்த வசூலை விட, சச்சின் படம் மிகவும் குறைவான வசூலையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கில்லி ரீ-ரிலீஸ்:
2004ஆம் ஆண்டு வெளியான படம், கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். தெலுங்கில் ஒக்கடு என்ற பெயரில் மகேஷ் பாபு நடித்த படத்தின் தமிழ் ரீ-மேக்தான் கில்லி. இதனை தரணி இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாக 20 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, கடந்த ஆண்டு இதனை ரீ-ரிலீஸ் செய்திருந்தனர்.
ஆரம்பத்தில் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே வெளியான இந்த படம், கொடுத்த வரவேற்பை பார்த்த பிறகு இன்னும் சில தியேட்டர்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது, இந்த ஆண்டும் அதே போல, சச்சின் படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
சச்சின் ரீ-ரிலீஸ்:
சச்சின் திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளியானது. இதனை ஜான் மகேந்திரன் இயக்கிருந்தார். எஸ். தாணு தயாரிப்பில் வெளியான இந்த படம் தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனங்களில் இடம் பெற்ற பெஸ்ட் ரொமாண்டிக் காமெடி படங்களில் ஒன்றாகும்.
இந்த படமும் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனது. இதையடுத்து இப்படம் கடந்த 18ஆம் தேதி, தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
கில்லி vs சச்சின்:
கில்லி படத்துடன் சச்சின் படத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, இப்படம் அந்த அளவிற்கு எதிர்பார்த்த வரவேற்பு அல்லது வசூலை பெறவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. கில்லி படம் ரீ ரிலீஸ் ஆன போது தியேட்டர்களுக்கு சென்று அதனை கொண்டாடிய ரசிகர்கள், சச்சின் படத்தை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
காரணம் என்ன?
கில்லி திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியான போதே, அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஒரிஜினல் ரிலீசின் போது ஹிட்டான அதோட மட்டுமன்றி, பலமுறை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்ட படம் இதுவாகும்.
கில்லி படத்தை பொறுத்தவரை எந்த இடத்திலும் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அவை ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும். அதேபோல காமெடி, ஆக்சன், காதல், மோதல், பாடல்கள் என அனைத்துமே இந்த படத்தை பொறுத்தவரை ஹிட்தான். ஆனால் சச்சின் படத்தின் கதை வேறு.
சச்சின் திரைப்படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடியாக எடுக்கப்பட்ட படமாகும். இந்த படம் 2005 ஆம் ஆண்டில் வெளியான போது சரியாக ஓடவில்லை. காரணம், அந்த சமயத்தில் இதனுடன் சேர்த்து சந்திரமுகி திரைப்படமும் வெளியானது. அதனால் மொத்த ரசிகர் கூட்டமும் அந்த படத்திற்கு சென்று விட்டது. இதை தொலைக்காட்சியில் பார்த்த பிறகுதான் பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியும்.
சச்சின் படத்திலும் அனைத்து பாடல்களும் ஹிட்தான். ஆனால், இதில் ரசிகர்கள் கண்டுகொள்ளும் படியான லாஜிக்கல் ஓட்டைகள் நிறைய இருக்கும். உதாரணத்திற்கு, கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ஊட்டி போன்று வெள்ளைப் புகை அடித்து வைத்திருப்பர். படம் முழுக்க இந்த வெள்ளை புகைதான் காட்சியளிக்கும்.
இவை மட்டுமல்ல, கில்லி படம் வெளியானபோது அதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அதற்கு பிரமோஷன். சச்சின் படத்திற்கு அந்த அளவிற்கு பிரமோஷன் இல்லை என கூறப்படுகிறது.கூறப்படுகிறது. போதாக்குறைக்கு, அஜித்தின் புதுப்படமான ‘குட் பேட் அக்லி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. எனவே, “பழைய படத்தை ஏன் பார்க்க வேண்டும்? புதுப்படத்தையே அந்த காசுக்கு பார்க்கலாமே” என ரசிகர்கள் அந்த ஸ்கிரீனை நோக்கி படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கில்லி அளவிற்கு இல்லை எனினும், சச்சின் படமும் நல்ல வசூலை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கில்லி vs சச்சின்: ரீ-ரிலீஸில் எந்த படம் மாஸ்? முதல் நாளில் அதிக கலக்ஷன் யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ