யோகி பாபு நடிகராக இருக்கவே தகுதியற்றவர் - பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!

நடிகர் யோகி பாபு நடிகராக இருக்கவே தகுதியற்றவர். தன்னுடைய படத்தின் பிரமோஷன்க்கு வரவே பணம் கேட்கிறார் என்று கஜானா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜா குற்றச்சாட்டு.

Written by - RK Spark | Last Updated : May 4, 2025, 01:02 PM IST
  • யோகிபாபு மீது குற்றசாட்டு.
  • புரமோஷனுக்கு வரவில்லை என்று புகார்.
  • தயாரிப்பாளர் சரமாரி குற்றசாட்டு.
யோகி பாபு நடிகராக இருக்கவே தகுதியற்றவர் - பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் அட்வெஞ்சர் ஃபேண்டஸி திரைப்படம் 'கஜானா'. இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் போட்டோஸ்!

படத்தின் நாயகன் இனிகோ பேசும்போது, "டிவியில் அட்வெஞ்சர் ஷோ ஒன்று பண்ணியிருந்தேன், அதை பார்த்துவிட்டு தான் இந்த வாய்ப்பு வந்தது. இந்த படத்தின் இயக்குநர் சாம் அதிகம் பேச மாட்டார், ஆனால் படத்தில் நிறைய பேசியிருக்கிறார். மிகப்பெரிய முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள். நடிகை வேதிகா இந்த படத்தில் ரொம்ப கியூட்டாக இருக்கிறார். சாந்தினி நடித்திருக்கும் வேடத்தில், அவரை தவிர யாராலும் நடித்திருக்க முடியாது, அந்த அளவுக்கு செய்திருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் அச்சு சார் யார் என்பது எனக்கு தெரியாது.

ஆனால் படம் பார்க்கும் போது அவர் பெரிய இடம் என்பது புரிந்தது. அந்த அளவுக்கு பின்னணி இசையை பிரமாண்டமாக கொடுத்திருக்கிறார். நான் எந்த படத்தை பற்றியும் இவ்வளவு பேசியது இல்லை, இந்த படம் குறித்து பேசுகிறேன் என்றால், அந்த அளவுக்கு படம் வந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் படம் ஓடிக்கிட்டே இருக்கும், படத்தில் விலங்குகள் அதிகம் வருவதால் இது குழந்தைகளுக்கான படமாக மட்டும் இருக்காது, பெரியவர்களுக்கும் பிடிக்கும், அவர்களுக்கு ஏற்ற அட்வெஞ்சர் காட்சிகள் இருக்கிறது. மக்கள் இந்த படத்தை பார்த்தால், நிச்சயம் இது பற்றிக்கொள்ளும். அதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக கஜானா அமையும்” என்றார்.

நடிகை வேதிகா பேசும்போது, "கஜானா படத்தின் ஒன்லைன் சொல்லும் போதே, எனக்கு இண்டர்ஸ்டிங்காக இருந்தது. ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப் வியூவில் நான் இதை கேட்ட போது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு அட்வெஞ்சர் படம் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். நான் இந்த படத்தில் ஒரு நடிகையாக பங்கேற்றாலும், ஒரு ரசிகையாக இந்த படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். இந்த படம் சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் சாரை பாராட்டுகிறேன், இப்படி ஒரு தைரியமான முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார். தயாரிப்பாளரும் அவர் தான், இரண்டு பணிகளையும் சேர்த்து செய்வது சாதாரண விசயம் இல்லை. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜா, "ஒரு படத்தை வெளியிடுவது என்பது ஒரு நடிகருக்கு குழந்தை பிறப்பது போன்று தான். அந்த குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க வேண்டிய பொறுப்பு அந்த நடிகருக்கு தான் உண்டு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபு இசை வெளியீட்டு விழாவிற்கு கூட வரவில்லை. 7 லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என்று சொல்கிறார். தான் நடித்த படத்திற்கு வருவதற்கே காசு கேட்பது எவ்வளவு கேவலமான ஒரு விஷயம்? ஒரு படத்தின் பிரமோஷனுக்கே வர பணம் கேட்கிறீர்கள் என்றால் நடிகராக இருக்கவே தகுதியற்றவர் நீங்கள்! இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்" என்று தெரிவித்துள்ளார். இது தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.

மேலும் படிக்க | விஜய் மகனுக்கு அட்வைஸ் செய்த அஜித்! என்ன சாென்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News