ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரபல யூடியூபர் வி.ஜே. சித்து!

பிரபல யூசியூபர் வி.ஜே. சித்து கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Mar 29, 2025, 10:35 PM IST
  • பிரபல யூடியூபர் வி.ஜே. சித்து டிராகன் படத்தில் நடித்தார்
  • தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரபல யூடியூபர் வி.ஜே. சித்து!

பிரபல யூடியூபர்களில் ஒருவர் வி.ஜே. சித்து. இவருக்கென தனி ரசிகர் படையே உள்ளது. பிராங் ஷோ மூலம் தனது பயணத்தை ஆரம்பித்த இவர், தற்போது வி.ஜே. சித்து வ்ளாக்ஸ் என்ற யூசியூப் சேனலை தொடங்கி 4 மில்லியனுக்கு மேல் சப்ஸ்கிரைப் வைத்துள்ளார். தனது சாகாக்களுடன் மேற்கொள்ளும் பயணம், ஃபுட் ரிவுயூ தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக தற்போது மொட்டை மாடி பார்டி என்ற ஷோ ஒன்றை ஆரம்பித்து அதில் பிரபலங்களை அழைத்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் வி.ஜே. சித்து. 

Add Zee News as a Preferred Source

இச்சூழலில் தனது பிரபலத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியானது. அப்படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் பாராட்டும் கிடைத்தது. இந்த நிலையில், வி.ஜே. சித்து ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். 

மேலும் படிங்க: 40-ஐ கடந்தும் சிங்கிளாக சுற்றும் நடிகர்கள்!! லிஸ்டு ரொம்ப பெருசு..

 

அதாவது, அந்த படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இதனை தயார்க்க உள்ளதாம். இந்நிலையில், இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், வரும் மே மாதம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இது தொடபான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், அவருடன் யூடியூப் சேனலில் சேர்ந்து பயணிக்கும் அர்ஷத் கானும் டிராகன் படத்தில் ஓர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கும் நல்ல வரவேற்பே கிடைத்தது. இந்த நிலையில், அர்ஷத் கான் விஜே. சித்துவின் நண்பர் என்பதால், அவரும் வி.ஜே. சித்து இயக்க இருக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் படிங்க: கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் 35 ரொமாண்டிக் ஹீரோ! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News