இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்

இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங் நடிக்கிறார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 4, 2022, 12:21 PM IST
  • இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது
  • லைகா நிறுவனம் தயாரிக்கிறது
  • ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்
 இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்

அரசியல் பயணத்தில் இருந்த கமல் ஹாசன் மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கிறார். அதன்படி அவர் நடித்த விக்ரம் படம் மாபெரும் வசூலை குவித்தது உலக நாயகனை வசூல் கிங் என்று காட்டியது. விக்ரம் கொடுத்த உற்சாகத்தில் பாதியில் நின்றுபோன இந்தியன் 2 படத்தில் மீண்டும் கமிட்டானார். விக்ரம் படத்துக்கு முன்னதாகவே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து அதனைத் தொடர்ந்து நடந்த சில நிகழ்வுகள் என படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டது.

இந்தச் சூழலில் அவ்வப்போது இந்தியன் 2 குறித்த பேச்சுக்கள் எழுந்தன. ஒருவழியாக அனைத்து பஞ்சாயத்துகளும் முடிந்த சூழலில் நடிகர் விவேக்கும், நெடுமுடி வேணுவும் உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்கள் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்பது குறித்த தீவிர ஆலோசனையில் இருந்தது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yograj Singh (@yograjofficial)

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் கமிட்டாகியிருக்கிறார். தனக்கு மேக்கப் போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதனை அவர் உறுதி செய்திருக்கிறார். தற்போது அந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது. அதேசமயம் யோக்ராஜ் சிங் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | 16 கோடிதான் பட்ஜெட் ஆனால் வசூல் எவ்வளவு தெரியுமா?... வியக்க வைத்த காந்தாரா

இதற்கிடையே நெடுமுடி வேணு கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜிடம் படக்குழு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அப்போது தனக்கு சம்பளமாக அவர் கேட்ட தொகை ஒத்துவரவில்லை எனவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க பொன்னியின் செல்வன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். லைகா நிறுவன இந்தப் படத்தை தயாரிக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News