புதிய மாற்றங்களுடன் கோலாகலமாக தொடங்கும் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5: முழு விவரம் இதோ

Zee Tamil Sa Re Ga Ma Pa: ZEE தமிழ் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 24, 2025, 04:12 PM IST
  • ஜீ தமிழ் சரிகமப.
  • ஏப்ரல் 24-ம் தேதி முதல் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு.
  • இந்த சீசனில் சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக இடம்பெற உள்ளனர்.
புதிய மாற்றங்களுடன் கோலாகலமாக தொடங்கும் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5: முழு விவரம் இதோ

Zee Tamil Sa Re Ga Ma Pa: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப. உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக இந்த சரிகமப ஒளிபரப்பாகி வருகிறது.  

கடந்த சில மாதங்களாக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 ஒளிபரப்பாகி வந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. திவினேஷ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.  

ZEE தமிழ் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீசனில் சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக இடம்பெற உள்ளனர்.  

ஏற்கனவே பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் வாரத்தில் மெகா ஆடிஷன் மூலமாக போட்டியில் பங்கேற்க உள்ள இறுதி கட்ட போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  

எனவே ஏப்ரல் 24 முதல் ZEE தமிழ் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 நிகழ்ச்சியை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7:00 மணிக்கு உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். இந்த முறையும் ZEE தமிழ் சரிகமப பல சாமானிய போட்டியாளர்களை சாதனையார்களாக மாற்றும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க | ஒரு நைட்டுக்கு ரூ.35 லட்சம்! சர்சையில் சிக்கிய கயாடு லாேஹர்..

மேலும் படிக்க | வில்லன் கதாபாத்திரத்தில் சேரன்! எப்படி இருக்கிறது நரிவேட்டை? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News