Zee Tamil: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ZEE தமிழ். மாறுபட்ட கதைக்களம் கொண்ட சீரியல்கள், ரியல் திறமைகளை ஊக்குவிக்கும் ரியாலிட்டி ஷோக்கள் என தொடர்ந்து மக்களின் நெஞ்சங்களை கவர்ந்து வருகிறது.
ஜீ தமிழ் பிரபலங்கள் மற்றும் கலைஞர்களுக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ZEE தமிழ் நட்சத்திரங்கள், சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்கும் "நம்ம ஊரு திருவிழா" என்ற சிறப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது.
வரும் ஏப்ரல் 5-ம் தேதி திருச்சியில் உள்ள மொராய்ஸ் சிட்டியின் C1 மற்றும் C2 கிரௌண்டில் மாலை 6:00 மணி முதல் கோலாகலமாக நடைபெற உள்ளது. சரிகமப குழுவினரின் இன்னிசை குரலில் பாடல்கள், டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலங்களின் அனல் பறக்கும் நடனங்கள் மற்றும் உங்கள் ஃபேவரைட் நட்சத்திரங்களின் சிறப்பு பர்பாமென்ஸ், ரசிகர்களுடனான சந்திப்பு என நிகழ்ச்சி மேடை களைகட்ட உள்ளது.
அர்ச்சனா, ஆர் ஜே விஜய் மற்றும் மணிமேகலை என மூன்று பேர் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். கெட்டி மேளம் சீரியல் பிரபலங்களான சாயா சிங், சிப்பு சூரியன், விராட், சௌந்தர்யா மற்றும் வீரா சீரியல் பிரபலங்களான வைஷ்ணவி, அருண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் அண்ணா சீரியல் பிரபலங்களான மிர்ச்சி செந்தில், நித்யா ராம் ஆகியோரும் பங்கேற்க சிறப்பு விருந்தினர்கள் சிலரும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மக்களே ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வாங்க கொண்டாட்டத்துடன் போங்க.
அனைவருக்கும் அனுமதி இலவசம்!
மேலும் படிக்க | ரஜினியின் ‘கூலி’ படம் ரிலீஸ் தேதி.. படக்குழு வெளியிட்ட அப்டேட்
மேலும் படிக்க | ஊரே பேசும் Adolescence Netflix தொடர்! அப்படி இதில் என்ன இருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









