Getti Melam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முருகன் சம்பளத்தை கொண்டு வந்து லட்சுமியிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சிவராமன் உன்னை ஏளனமா பேசுனவங்க முன்னாடி எல்லாம் நீ நல்லா வாழ்ந்து காட்டணும் என சொல்கிறார். அடுத்ததாக துளசி வெற்றிக்கு போன் செய்து என்ன சார் அந்த பையனை அப்படி அடிச்சி வச்சிருக்கீங்க என்று கேட்கிறாள்.
மேடம் உங்க பின்னாடி சுத்துனா சும்மா விட முடியுமா என்று கேட்க துளசி அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தா எங்க ரெண்டு குடும்பத்துக்கும் பெரிய பிரச்சனையே ஆகி இருக்கும். இனிமே நீங்க எதுவும் பண்ண வேண்டாம் நானே பார்த்துக்கறேன் என்று சொல்லி போனை வைக்கிறாள்.
பிறகு தனது வீட்டிற்கு கட்டுடன் வந்த வெற்றி இங்கும் ஆக்சிடென்ட் ஆகி விட்டதாக பொய் சொல்லி சமாளிக்கிறான். அடுத்ததாக மகேஷ் அஞ்சலியிடம் தனக்காக ஒரு பாட்டு பாட சொல்லி ரொமான்ஸ் செய்கிறான்.
இதெல்லாம் முடிந்த பிறகு மகேஷ் மற்றும் சிவராமன் பேசும் போது முருகன் பற்றிய பேச்சு அடிபடுகிறது, சிவராமன் முருகன் நாங்க தத்தெடுத்த பிள்ளை என சொல்கிறார். மேலும் நீங்க வளர்ந்த ஆசிரமத்தில் தான் முருகனும் வளர்ந்ததாக சொல்ல மகேஷ் அதிர்ச்சி அடைகிறான்.
பிளாஷ்பேக்கில் சிவராம் மகேஷ் குறித்து விசாரிக்க சென்றிருந்த போது குழந்தையை கொன்னுடுவேன் என்று மிரட்டி தன்னை பற்றி நல்ல விதமாக சொல்ல வைத்த விஷயம் தெரிய வருகிறது. அடுத்து முருகனின் உண்மையான பெயர் என்ன என்று கேட்க அர்ஜுன் என்று சொன்னதும் மகேஷ் உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறான்.
உடனே அஞ்சலியிடம் வந்து முக்கியமான மீட்டிங் இருக்கு.. இன்னைக்கே கிளம்பி ஆகணும் என்று சொல்கிறான். அஞ்சலியும் தனது குடும்பத்தாரிடம் சொல்ல தல தீபாவளி சீர் செய்து இருவரையும் அனுப்பி வைக்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிங்க: கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ