ஸ்ரீநகரில் இன்று பாகிஸ்தான் தேசிய தினம் அனுசரிப்பு!
ஸ்ரீநகரில் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் இ மில்லத் அமைப்பின் தலைவி அசியா அன்ட்ராபி தலைமையில் பாகிஸ்தான் தேசிய தினம் அனுசரிக்கப்பட்டது.
ஸ்ரீநகரில் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் இ மில்லத் அமைப்பின் தலைவி அசியா அன்ட்ராபி தலைமையில் பாகிஸ்தான் தேசிய தினம் அனுசரிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மக்கள் தொகை மிகுந்த நாடுகளின் வரிசையில் ஆறாம் இடமும் அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள் ஆவார்கள். அவர்களுக்கு உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரபூர்வ மொழிகளாகும்.
இந்திய தேசத்தை வெள்ளையர்களிடமிருந்து விடுவிக்க நடந்த சுதந்திரப் போராட்டத்தில், காந்தியடிகளுடன் இணைந்து போராடியவர் முகம்மது அலி ஜின்னா என்பவர் ஆவர். காந்தியின் கொள்கை பிடிக்காமல், 1920-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் 1940-ல் முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதனை கொண்டாடும் வகையில் பாகிஸ்தான் தேசிய தினம் பின்பற்றப்படுகிறது.
இந்த நாளில் பாகிஸ்தான் படைத் துறைகள் இணைந்து அணிவகுப்பை நடத்திக் கொண்டாடுகின்றன. அந்த வகையில் இன்று பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அனைத்துக்கட்சி ஹுரியத் மாநாட்டுக்கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் இ-மிலத்- அமைப்பின் தலைவி ஆசியா அன் ட்ராபி தலைமையில் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தேசிய தினத்தை அனுசரித்து வருகிறார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.