நடிகை சௌந்தர்யா போல மர்மமான முறையில் உயிரிழந்த நடிகைகள்!

Actresses Who Died Mysterious: நடிகை செளந்தர்யா போல் மர்மமான முறையில் உயிரிழந்த நடிகைகள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம். 

 

நடிகை செளந்தர்யா கடந்த 2004ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்ததாக தான் இப்போது வரை நம்ப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செளந்தர்யாவின் இறப்பு விபத்தால் ஏற்பட்டது அல்ல. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என ஆந்திராவை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை செளந்தர்யாவின் இறப்பில் மர்மம் இருப்பதுபோல், சில பிரபல நடிகைகளின் இறப்பிலும் மர்மம் இருந்து வருகிறது. அப்படி செளந்தர்யாவை போல எந்த நடிகைகளின் இறப்பில் மர்மம் இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம். 

1 /5

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஒரு ஹோட்டல் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 

2 /5

பிரபல நடிகை சில்க் ஸ்மிதா 1996ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இன்று வரை உள்ளது. பல மொழிகளில் நடித்த சில்க் ஸ்மிதா காதலுக்காகவும், அன்புக்காகவும் ஏங்கிய அவர் ஒருவரை காதலித்தார் என கூறப்படுகிறது. ஆனால் அவர் சில்க் ஸ்மிதாவை ஏமாற்றியதாகவும் அதனால் தான் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டதாகவும் பேசப்படுகிறது.   

3 /5

பாலிவுட் நடிகை திவ்ய பாரதி 1993ஆம் ஆண்டு மும்பையில் அவர் தங்கிருந்த குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து தடுக்கி விழுந்து இறந்தார். ஆனால் அவரது இறப்பில் சந்தேகத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும் திவ்ய பாரதியின் மறைவு இயற்கைக்கு மாறானது என்று வழக்கை முடித்து வைத்தது. 

4 /5

நடிகை ஜியா கான் இந்தியில் கடந்த 2007ஆம் ஆண்டு நிஷாபத் படத்தின் மூலம் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு இந்தியில் வெளியான கஜினி படத்தில் நடித்தார். இந்நிலையில், 2013ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். ஆனால் அவரது தாயார் இது தற்கொலை அல்ல கொலை என புகார் அளித்தார். நீதிமன்றமும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லாததால் இவ்வழக்கை முடித்து வைத்தது. 

5 /5