Unbreakable records in Asia Cup: ஆசிய கோப்பையில் முறியடிக்க முடியாத 10 சாதனைகள் என்னென்ன?
1984ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பல மறக்க முடியாத தருணங்கள் உள்ளன. முன்னணி வீரர்கள் பலர் தங்களது பெயரை வரலாற்றில் பொறித்துள்ளனர். தற்போது, 2025 ஆசிய கோப்பை தொடங்கி உள்ள நிலையில், வரலாற்றில் ஒருபோதும் முறியடிக்க முடியாத 10 சாதனைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1/10விராட் கோலி 183: 2012 ஆசியக் கோப்பையின் போது டாக்காவில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அடித்த 183 ரன்கள், போட்டியின் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. அதன்பின் நடந்த ஆசிய கோப்பையில் இதனை யாரும் இதுவரையில் முறியடித்ததில்லை. இது ஒருநாள் கிரிக்கெட்டின் மிகவும் பிரபலமான இன்னிங்ஸ்களில் ஒன்றாகும்.
2/10இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி: 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஹாங்காங்கை 256 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுரேஷ் ரெய்னா (68 பந்துகளில் 101) மற்றும் பியூஷ் சாவ்லா (4/23) அந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டனர்.
3/10சனத் ஜெயசூர்யா (378): 2008 ஆசியக் கோப்பையின் போது இலங்கையின் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா வெறும் ஐந்து ஆட்டங்களில் 378 ரன்கள் குவித்தார். ஆசிய கோப்பை தொடரில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்களாக உள்ளது. இதுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
4/10ரோகித் சர்மா 40 சிக்ஸர்கள்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 40 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அடுத்த சிறந்த வீரர் ஷாஹித் அப்ரிடி 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
5/10ரோகித் சர்மா - அதிக போட்டிகள்: இந்தியாவின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா 37 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டாவது சிறந்த வீரர் ரவீந்திர ஜடேஜா 26 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
6/10பாகிஸ்தானின் மோசமான சாதனை: ஒரே இன்னிங்ஸில் 38 கூடுதல் ரன்களை விட்டுக்கொடுத்து பாகிஸ்தான் மிகவும் மோசமான ஒரு சாதனையை படைத்தது. மேலும் அவர்கள் அதை ஒரு முறை அல்ல, இரண்டு முறை செய்துள்ளனர்.இப்படி ஒரு மோசமான சாதனை இனி எந்த அணியும் செய்ய விரும்பாது.
7/10முத்தையா முரளிதரன் - அதிக விக்கெட்கள்: இலங்கை சுழற்பந்து வீச்சாளர், ஆசிய கோப்பை வரலாற்றில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனை படைத்தார். இதனை இதுவரையில் யாரும் முறியடிக்கவில்லை. இதை முறியடிப்பதும் கடினம்.
8/10லசித் மலிங்கா - 3 முறை ஐந்து விக்கெட்கள்: ஆசிய கோப்பை வரலாற்றில் லசித் மலிங்கா மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரைத் தொடர்ந்து அஜந்தா மெண்டிஸ் இரண்டு முறை 5 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
9/10அஜந்தா மெண்டிஸ் (6/13 vs இந்தியா): 2008 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இது மிகப்பெரிய சாதனையாக மாறிய நிலையில், இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
10/10சனத் ஜெயசூர்யா - அதிக சதங்கள்: இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா ஆசிய கோப்பையில் தொடரில் மொத்தமாக 6 சதங்களை அடித்து சாதனை படைத்திருக்கிறார். இதனை எவரும் முறியடிக்க வாய்ப்பில்லை.