பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000... தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை - யார் யாருக்கு?

Written BySudharsan GUpdated bySudharsan G
Published: Sep 18, 2025, 06:29 PM IST|Updated: Sep 18, 2025, 06:29 PM IST

Tamil Nadu Government: கிராமப்புறங்களில் படிக்கும் பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வரை ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது. இத்திட்டம் குறித்தும், இதற்கான தகுதிகள் குறித்தும் இங்கு காணலாம்.

TN Govt Schemes: கிராமப்புறங்களில் படிக்கும் பள்ளி மாணவியருக்கு வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு சில தகுதிகளும் தேவைப்படும். அதையும், இத்திட்டத்திற்கு எந்த அலுவலரை அணுக வேண்டும் என்பதையும் இங்கு காணலாம்.

1/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) மாணவியர், பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புற பள்ளி மாணவியருக்கு என்ற தனித்திட்டம் ஒன்றையும் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 

 

2/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கிராமப்புற பள்ளி மாணவியருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 

 

3/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியின் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 2025-26 பட்ஜெட்டின்போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

4/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், இதில் அனைத்து வகுப்பு மாணவியருக்கும் ரூ.1000 கிடையாது. 

 

5/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 6 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

 

6/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

மேலும், இந்த திட்டத்தில் பயன்பெற மாணவியருக்கு சில தகுதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவியர் கிராமப்புறங்கலில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவியர் பயில்பவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். 

 

7/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

மேலும், இது மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

8/8

தமிழ்நாடு அரசு திட்டங்கள்

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற மாணவியர் சம்பந்தப்பட்ட கிராமப்புற அரசு, அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அணுகலாம்.