தங்கம் விற்கும் விலையில்...102 கிலோ தங்க டாய்லெட்! விலை என்ன தெரியுமா?

102 Kgs Of Golden Toilet Price : தங்கம் விற்கும் விலையில், 102 கிலோ எடையில் தங்கத்திலேயே தற்போது டாய்லெட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

102 Kgs Of Golden Toilet Price : நம் அனைவருக்கும் தங்கத்தின் விலையை கேட்டாலே தலை சுற்றுகிறது. இந்த சமயத்தில் தங்கத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென பலர் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஆனால் இங்கு, தங்கத்தாலேயே தற்போது டாய்லெட் கட்டப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

1 /7

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால், கையில் இருக்கும் தங்கத்தை எப்படி பார்த்துக்கொள்ளலாம் என யோசித்து வருகின்றனர். இந்த சமயத்தில்தான், Golden Toilet என்கிற விஷயம் வைரலாகி வருகிறது.

2 /7

பளபளக்கும் இந்த டாய்லெட், மொத்தம் 102.1 கிலோ எடை மற்றும் 18 கேரட் தங்கத்தால் வடிவமைக்கப்படுள்ளதாம். 

3 /7

இந்த டாய்லெட்டை மொரிசியா கட்டெலன் என்கிற கைவினை கலைஞர் வடிவமைத்துள்ளார். உற்றுப்பார்த்தால் முகம் தெரியும் அளவிற்கு இந்த டாய்லெட்டை அவர் உருவாக்கியிருக்கிறார். 

4 /7

இந்த கழிவறையானது, அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தில் ஏலத்திற்கு வர இருக்கிறதாம். இந்த மிணுமிணுக்கும் டாய்லெட்டை வாங்க பலர் போட்டி போடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 /7

இந்த டாய்லெட்டின் விலையானது, இந்திய ரூபாயின் மதிப்பின்படி, சுமார் 88 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனை சிலர் தங்க சிம்மாசனம் என்று கூறி வருகின்றனர்.

6 /7

இந்த டாய்லெட்டை பார்க்கும் மக்கள், “இதை பார்த்தால் கழிவறையில் செய்யும் வேலையை செய்ய மனதே வராதே..” என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர், இதில் தண்ணி வருமா அல்லது பணம் வருமா என்று கேட்டு வருகின்றனர்.

7 /7

இந்த தங்க டாய்லெட் குறித்த விவரங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.