T20 World Cup Winners And Runners Up: இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்ற அணிகள் மற்றும் இரண்டாம் அணிகள் பிடித்த அணிகள் குறித்து.
T20 World Cup Winners And Runners Up From 2007 To 2024: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் இந்திய அணி முன்னேறி உள்ள நிலையில், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இறுதி போட்டியில் வென்ற அணிகள் மற்றும் ரன்னர் அப் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
2007 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை இர்பான் பதான் பெற்றார்.
2009 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணி மோதிக்கொண்டன. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஷாகித் அப்ரிடி பெற்றார்.
2010 டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதின. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை கிரெய்க் கீஸ்வெட்டர் பெற்றார்.
2012 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணி மோதின. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை மார்லன் சாமுவேல்ஸ் பெற்றார்.
2014 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணி மோதின. இப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை குமார் சங்கக்கார பெற்றார்.
2016 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை மார்லன் சாமுவேல்ஸ் வென்றார்.
2021 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை மிட்செல் மார்ஷ் வென்றார்.
2022 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை சாம் கரண் வென்றார்.
2024 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்றார்.