மீனத்தில் இணையும் 4 கிரகங்கள்... இந்த அரிய யோகத்தால் 5 ராசிகளுக்கு நல்ல நேரம்

Chaturgrahi Yog 2025: ராகு, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் மீனத்தில் இணைவதால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை காத்திருக்கிறது.

ராகு, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் மீன ராசியில் இணைகின்றன. மேலும், புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் நாராயணன் ராஜயோகம் (Narayanan Rajyog) உண்டாகிறது.

1 /8

ஜோதிடத்தின்படி, மார்ச் மாத தொடக்கத்திலேயே கிரகங்களின் அரிய மஹாசன் யோகம் உண்டாகிறது. ராகு, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் மீனத்தில் இணைகின்றன.

2 /8

குறிப்பாக, புதன் கிரகம் மற்றும் சுக்கிரன் இணைவதால் நாராயணன் ராஜயோகம் உண்டாகிறது. இதனால், இந்த 5 ராசிக்காரர்களின் குடும்ப வாழ்வு, பணி வாழ்வு மற்றும் பொருளாதாரம் ஆகியவை நேர்மறையாக மாறப்போகிறது.

3 /8

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக நிலை 11வது வீட்டில் உருவாகிறது. நான்கு கிரகங்கள் இணைவதால் நண்பர்களிடம் இருந்தும், மூத்த சகோதரர்களிடம் இருந்தும் நன்மைகள் வந்து சேரும். வருமானத்திற்கான தடங்கல்கள் நீங்கும். தொழில் நடத்துபவராக இருந்தாலும் சரி, நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் சரி உங்களுக்கு நல்ல லாபம் வரும் காலகட்டம் இது. நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

4 /8

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக நிலை 10வது வீட்டில் உருவாகிறது. திருமணமானவர்களுக்கு அவர்களின் மாமனார் - மாமியார் மூலம் நன்மைகள் வந்து சேரலாம். திருமண உறவில் இருக்கும் சிக்கல்கள் தீரும். தொழில்நடத்துபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும். பணியில் இருப்போர்கள் ஊதிய உயர்வு அல்லது பணி உயர்வு ஏற்படலாம்.  

5 /8

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக நிலை 9வது வீட்டில் உருவாகிறது. இதனால், அதிர்ஷ்டம் மொத்தமும் உங்கள் மீதே இருக்கும். நீண்ட நாள்களாக நிறைவேறாமல் இருக்கும் பணிகள் அனைத்தும் முழுமை அடையும். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டாகும். மாணவர்களின் கனவு நிறைவேறும்.

6 /8

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக நிலை 7வது வீட்டில் உருவாகிறது. இதனால், மனைவியிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம். தொழில் பார்ட்னர்களால் பெரிய நன்மைகள் வரலாம். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகமாகும்.

7 /8

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக நிலை 4வது வீட்டில் உருவாகிறது. தாய் வழியில் இருந்து உங்களுக்கு பெரிய நன்மைகள் ஏற்படும். வருமானம் அதிகமாகும். பொருளாதார நிலையும் முன்னேறும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.