Unfaithful Zodiac Signs: ஜோதிடத்தின்படி, சில ராசியில் பிறந்த ஆண்கள் உறவுகளில் உண்மையாக இருக்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Unfaithful Zodiac Signs: இந்த 4 ராசியில் பிறந்த ஆண்கள் குறிப்பாக காதல் விஷயங்களில் உண்மையாக இருக்க மாட்டார்கள் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு குணங்கள் கொண்டுள்ளன. இவர்களின் குணங்கள் அடிப்படையிலேயே, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சில ராசியில் பிறந்த ஆண்கள் உறவில் உண்மையாக இருக்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
அதில் முதலாவதாக இருப்பது மேஷ ராசிக்காரர்கள். மேஷ ராசிக்கார்கள் கோபக்காரர்களாம். இவர்கள் உறவுகளில் உண்மையாக இருக்க மாட்டார்கள். குறிப்பாக, காதலியிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க மாட்டார்களாம். இவர்கள் பல உறவுளை ஒரே நேரத்தில் பராமரிக்க விரும்புபவார்களாம். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் கடந்த கால உறவுகளை மறைத்து வைத்திருப்பார்களாம்.
அவர்கள் எதிலும் திருப்தி அடைய மாட்டார்கள். இதனால், அவ்வப்போது உறவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக மேஷ ராசிக்கார்கள் உறவுகளில் ஒருபோதும் உண்மையாக இருக்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக, சிம்மம் ராசிக்காரர்கள் எப்போது பாராட்டை விரும்புபவார்கள். அவர்களின் உறவில் எப்போதுமே நேர்மையாக இருக்க மாட்டார்களாம். மேலும், தங்கள் துணை போதுமான கவனம் செலுத்தாவிட்டால், அவர்கள் கவனத்திற்கு இருக்கும் துணையை அவர்கள் தேர்ந்தெடுப்பார்களாம்.
தங்கள் துணையை எப்போதுமே சிம்ம ராசிக்காரர்கள் மாற்றிக் கொண்டே இருப்பார்களாம். அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால், துணையை மாற்ற துளியும் யோசிக்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. துலாம் ராசிக்கார்கள் காதல் விவகாரத்தில் நேர்மையாக இருக்க மாட்டார்கள். இவர்கள் தங்கள் துணைக்கு துரோகம் செய்வார்களாம். சிறு சிறு விஷயங்களுக்கு கூட பொய் பேசுவார்களாம். சில நேரங்களில் சுய நலமாகவும் யோசிப்பார்களாம். தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை காதலிப்பார்களாம்.
இவர்கள் காதல் உறவு மட்டுமின்றி, மற்ற உறவுகளிலும் நேர்மையாக இருக்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மிதுன ராசிக்காரர்கள் புதனால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் உறவில் துரோகம் செய்யக் கூடியவர்களாக இருப்பார்களாம். காதல் உறவு மட்டுமின்றி, பெற்றோர், சசோதரர்களுக்கு துரோகம் செய்வார்களாம். .
எந்த உறவாக இருந்தாலும் பொய் மட்டுமே பேசுவார்களாம். இவர்கள் துணையை சிறு சிறு விஷயங்களுக்கு காயப்படுத்துவார்களாம். எனவே, மேற்கண்ட 4 ஆண் ராசிகளிடம் இருந்து பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக, காதல், திருமண உறவில் அவர்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.