Weight Loss Tips: உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த பானங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Weight Loss Drinks: உடல் எடை அதிகமாக இருப்பது பலருக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. அதனை குறைக்க உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு என பல விஷயங்களை நாம் நாடுகிறோம். இந்த நிலையில், உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க சில பானங்களை வீட்டிலேயே நாம் தயாரித்து குடிக்கலாம். அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க கிரீன் டீ சிறந்த பானம் ஆகும். இதனை காலையில் குடிக்கலாம். கிரீன் டீ செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. தொடர்ந்து கிரீன் டீ குடிப்பதால் தொப்பை குறையும்.
எலுமிச்சை நீர் உங்கள் நாளை தொடங்க சிறந்தாக இருக்கும். இதில் வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான தாதுக்கள் அதிகம் இருக்கின்றன. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க இது சிறந்த ஒரு பானமாக உள்ளது.
இஞ்சி டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் குமட்டலை குறைக்கவும் உதவுகிறது. இதில் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
வெந்தய நீர் ஒரு இயற்கையான டையூரிடிக் ஆகும். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்கள் வயிற்றை நிரம்பியதாக உணர வைக்கும். இதன் காரணமாக தேவையற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க இது சிறந்த பானம் ஆகும்.
இலவங்கப்பட்டை நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. அதேபோல் வீக்கத்தை குறைக்க உதவும் ஆக்ஸிஜனேற்றிகளும் இதில் உள்ளன. எனவே இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் உடல் எடை குறைவதோடு நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.