Fastest Half Centuries By Indian Cricketers: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த 5 இந்தியர்கள் குறித்து.
Fastest Half Centuries By Indian Cricketers: டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த 5 இந்தியர்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை வரும் 7ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், நாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த 5 இந்தியர்கள் குறித்து பார்க்கப்போகிறோம். இந்த பட்டியலில், 5ல் 3 பேர் தற்போது இந்திய டி20 அணியில் இருப்பவர்கள்.
யுவராஜ் சிங்: இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங், 2007 டி20 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
அபிஷேக் சர்மா: தற்போதைய இந்திய டி20 அணியின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, கவுகாத்தியில் நியூசிலாந்துக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
ஷிபம் துபே: இந்திய டி20 அணியின் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே, நியூசிலாந்து அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
ஹர்திக் பாண்டியா: இந்திய அணியின் நட்சத்திர அல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் 2025ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
அபிஷேக் சர்மா: இந்த பட்டியலில் மீண்டும் இடம் பிடித்துள்ளார் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா. இவர் 2025ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தி இருந்தார்.